செய்திகள் :

மும்பை: பேஸ்புக் லிங்க்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.50 லட்சம்; முன்னாள் வங்கி அதிகாரியிடமே மோசடி

post image

மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரி(70) என்ற பெண் மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகையை வங்கிகளில் 26 வைப்பு தொகையாக வைத்திருந்தார்.

அவரது மொபைல் போனுக்கு கிரெடிட் கார்டு பேஸ்புக் லிங்க் ஒன்று வந்தது. கிரெடிட் கார்டு எடுக்கும் ஆசையில் அந்த லிங்க்கை ராஜேஷ்வரி கிளிக் செய்தார். கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ராஜேஸ்வரி பேஸ்புக் இணைப்பை கிளிக் செய்தபோது அவரது மொபைல் போனை சைபர் கிரிமினல் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து மோசடி செய்துள்ளனர்.

ராஜேஷ்வரி கிரெடிட் கார்டு இணைப்பை கிளிக் செய்தவுடன் வங்கியின் கிரெடிட் கார்டு துறையிலிருந்து பேசுவதாகக் கூறி தன்னை ஜோசப் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அவரை வாட்ஸ்அப் மூலம் அழைத்தார். போனில் பேசிய நபர் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கோப்பு, வங்கி கிரெடிட் கார்டு சரிபார்ப்பு விண்ணப்பம் என்று தெரிவித்தார்.

உடனே ராஜேஷ்வரி அந்த இணைப்பை கிளிக் செய்து திறந்து பார்த்தார். இதையடுத்து மொபைல் போனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த சைபர் கிரிமினல்கள், ராஜேஷ்வரி வங்கிகளில் வைப்பு தொகையாக வைத்திருந்த பணத்தைத் தங்களது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றத்தொடங்கினர்.

26 வைப்புத் தொகையைப் பாதியிலேயே முடித்து அதனைத் தங்களது வங்கிக்கு மாற்றினர். மொத்தம் ரூ.50 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டது. இது குறித்து தெரியவந்த உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் ராஜேஷ்வரி புகார் செய்தார். அதோடு அவர் 1930 சைபர் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, மோசடி கண்காணிப்புக் குழு மற்றும் டிஜிட்டல் மேலாண்மை அதிகாரிகளையும் அவர் சந்தித்து புகார் செய்தார். ஆனால் வார இறுதி நாளில் சரியான நேரத்தில் செயல்பட முடியாது என்று அவர்கள் கூறியதாக ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி மற்றும் அரசு இணையதளங்களிலும் புகார் செய்தார். அப்படி இருந்தும் ரூ. 16, ரூ. 25 மற்றும் ரூ. 250 மட்டுமே திரும்பப் பெற முடிந்தது. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தனது வங்கிக்கணக்கை பிளாக் செய்யும்படி ராஜேஷ்வரி கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்ட பிறகும் அவரது வங்கிக்கணக்கில் ரூ. 12.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு முறையான விசாரணைக் குழுவை அமைப்பதாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவர் உறுதியளித்ததாகவும் ஆனால் தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் ராஜேஸ்வரி கூறினார்.

ராஜேஷ்வரி பிரதமரின் CPGRAMS மற்றும் முதலமைச்சரின் குறை தீர்க்கும் இணையதளங்களையும் அணுகி அதிலும் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத போதிலும், பிரதமரின் குறைதீர்ப்பு இணையத்தில் தனது புகாருக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது எனக் அவர் கூறினார்.

சைபர் கிரிமினல்கள் ராஜேஷ்வரியின் வைப்புத் தொகையை எடுத்த நவம்பர் 17ம் தேதி வங்கி மற்றும் மும்பை வடக்கு சைபர் போலீஸில் புகார் செய்தார். ஆனால் சம்பந்தப்பட்ட சைபர் அதிகாரி விடுமுறையில் சென்று இருப்பதாகக் கூறி ஜனவரி 3, 2025 அன்றுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க