செய்திகள் :

மும்பை: விலகும் விசுவாசிகள்: நெருக்கடியில் உத்தவ் வாரிசு; கோட்டையை தக்கவைப்பாரா ஆதித்ய தாக்கரே?!

post image

மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அமித் தாக்கரே தோல்வியடைந்துவிட்டார். ஆனால் ஆதித்ய தாக்கரே மட்டும் ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் இந்த ஒர்லி தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளை பிடிப்பதில் இப்போது பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் தீவிரம் காட்டி வருகின்றன.

மும்பை மாநகராட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையடுத்து ஒர்லியில் சில வார்டுகள் ராஜ் தாக்கரே கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்-உத்தவ்

இத்தேர்தலில் ஆதித்ய தாக்கரேயை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஒர்லிக்கு உட்பட்ட வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் நிறுத்தி இருக்கின்றன. மொத்தமுள்ள 6 வார்டுகளில் 4 வார்டுகளில் போட்டி வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

அவர்களை போட்டியில் இருந்து வாபஸ் பெற வைக்க கட்சி தலைமை மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை. உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சட்டமேலவை உறுப்பினர் சுனில் ஷிண்டேயின் சகோதரர் நிஷிகாந்த் 194வது வார்டில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருக்கிறார். இதே வார்டில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை சேர்ந்த சோனல் பவார் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 196வது வார்டில் முன்னாள் கவுன்சிலர் ஆசிஷ் செம்பூர்கர் மனைவி பத்மஜா உத்தவ் தாக்கரே கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே கட்சியை சேர்ந்த சங்கீதா ஜக்தாப் அதே வார்டில் சுயேச்சையாக களத்தில் நிற்கிறார்.

193வது வார்டில் சிவசேனா(உத்தவ்)வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடும் ஹேமாங்கி ஒர்லிகரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த சூரியகாந்த் கோலி போட்டியிடுகிறார்.

இதனால் இத்தேர்தலில் ஒர்லி பகுதியை தக்கவைத்துக்கொள்வது ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கூட்டணிக்கு சவாலான ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த தொகுதியில் ஆதித்ய தாக்கரே எம்.எல்.ஏ.வாக இருப்பதால் இத்தொகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா(உத்தவ்) உறுதியாக இருக்கிறது. ஆனால் அதிருப்தி வேட்பாளர்களால் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆதித்ய தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் மானேயை 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2024 மக்களவைத் தேர்தலில், சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் அரவிந்த் சாவந்த் ஒர்லி சட்டமன்றத் தொகுதியில் 6,715 வாக்குகள் மட்டுமே பெற்று முன்னிலை பெற்றார். 2024 சட்டமன்றத் தேர்தலில், சிவசேனாவின் மிலிந்த் தியோராவை எதிர்த்து வெறும் 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்ய தாக்கரே ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்றார்.

மராத்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த ஒர்லியை தக்கவைத்துக்கொள்வது தாக்கரே சகோதரர்களுக்கு மிகவும் கெளரவ பிரச்னையாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஒர்லி தொகுதியை சேர்ந்த நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சந்தோஷ் தூரி அக் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். அதோடு மும்பை நவநிர்மாண் சேனா தலைவர் சந்தீப் தேஷ்பாண்டேயும் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதனை சந்தீப் தேஷ்பாண்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிருப்தி வேட்பாளர்கள், நவநிர்மாண் சேனாவின் ஒத்துழைப்பு இன்மை போன்ற காரணங்களால் ஒர்லியை தக்கவைத்துக்கொள்வதில் ஆதித்ய தாக்கரே திணறி வருகிறார்.

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

"இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்" - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் ... மேலும் பார்க்க

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்ப... மேலும் பார்க்க

மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் எ... மேலும் பார்க்க

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க