செய்திகள் :

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

post image

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அக்கட்டடம் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. மோப்ப நாய் படை, நான்கு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக மண் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்தனர்.

மீட்பு பணி

இடிந்து விழுந்த கட்டடத்தில் வசிக்கும் சாகுல் ஹமீத் என்பவர் சம்பவம் குறித்து கூறுகையில், ``கட்டடம் இடிந்து விழுவதற்கு முன்பு மிகப்பெரிய சத்தம் கேட்டது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கட்டடத்தில் வசித்த பல குடும்பங்கள் அங்கிருந்து காலி செய்துவிட்டன. மேலும் சிலர் வீட்டை காலி செய்ய தயாராகிக்கொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது'' என்று தெரிவித்தார்.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது குறித்து கேள்விப்பட்டு மாநகராட்சி துணை கமிஷனர் அர்விந்த் நேரில் வந்து பார்வையிட்டார். இது குறித்து அர்விந்த் கூறுகையில், ''நாங்கள் அங்கு சென்றபோது, ​​அந்தக் கட்டடம் விரிசல் அடைந்து கொண்டிருப்பதைக் கண்டோம். எங்கள் குழுவுடன் உள்ளே சென்று அங்கிருந்தவர்களை வெளியேற்றினோம். வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வெளியே வந்துவிட்டனர்; இருப்பினும், சில பெண்கள் தாங்கள் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வருவதாக ஆரம்பத்தில் கூறினர்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளே பழைமையானதாகக் கருதப்படும் அந்தக் கட்டடத்தில், பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வரவில்லை. நாங்கள் வெளியே வந்த சில நிமிடங்களிலேயே அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது" என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து இடிந்து விழுந்த கட்டடத்தில் வசித்த அபய் குமார் யாதவ் கூறுகையில், ``நானும் எனது குடும்பத்தினரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தபோது, ​​கட்டடத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் எங்கள் அறைக்குள் இருந்தோம். அப்போது பலத்த சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக வெளியே ஓட முயற்சித்தோம், ஆனால் தப்பிக்க வழி இல்லை. அதனால் நான் முதல் மாடியில் இருந்து குதித்தேன். விழுந்ததில் தனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது'' என்று கூறினார்.

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ... மேலும் பார்க்க

தஞ்சை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர்; காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் பலியான சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில்... மேலும் பார்க்க

அறுவடை இயந்திரத்தில் சிக்கிய புடவை; பெண் தொழிலாளி உயிரிழப்பு - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் ச... மேலும் பார்க்க

மும்பை நிலச்சரிவு: பாறை உருண்டு வீடுகளில் விழுந்ததால் 5 பேர் பலி; நள்ளிரவில் என்ன நடந்தது?

மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் கெளஷியா சால் பகுதியில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த 3 வீட்டில் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உற... மேலும் பார்க்க

விமானத்திற்குள் கஞ்சா புகைத்த பைலட்; கீழ்நோக்கி பறந்த விமானத்திற்குள் மிதந்த பயணிகள்; நடந்தது என்ன?

கடந்த சில நாள்களுக்கு முன்பு புக்கெட் என்ற இடத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இதனால் விமானம் ஆடியதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளில் ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி: `இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' - HM சஸ்பெண்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகேஷ் துடிதுடிக்க பரித... மேலும் பார்க்க