செய்திகள் :

முரசு புயல்: எப்போது கரையைக் கடக்கிறது? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Latest Update

post image

முரசு புயலின் லேட்டஸ்ட் அப்டேட்டை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை மையத்தின் எக்ஸ் தளப் பதிவின் படி, "மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு எனும் கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணி நேரத்திற்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) காலை 8:30 மணி அளவில் மத்திய-மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

இது நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே - தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும்,

காவாலிக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே - தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 210 கி.மீ தொலையிவிம், மச்சிலிப்பட்டணத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 240 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) நள்ளிரவு (இரவு 11:30 மணி) முதல் நாளை (நவம்பர் 03) அதிகாலை (காலை 04:00 மணி) இடைப்பட்ட காலத்தில், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே,

ஓங்கோலுக்குத் தெற்கே, மணி நேரத்திற்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் இடை இடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கடும் புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (நவம்பர் 1), சென்னை வானிலை மையத்தின் தகவலின் படி, இன்றும் (நவம்பர் 2), நாளையும் (நவம்பர் 3) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

நவம்பர் 2, 2026
நவம்பர் 2, 2026
நவம்பர் 3, 2026
நவம்பர் 3, 2026

Rain Alert: முரசு புயல்; ``நாளை மாலைவரை கனமழைப் பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும... மேலும் பார்க்க

Rain Alert: 'உருவாகும் முரசு புயல்'- தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ ... மேலும் பார்க்க

Rain Alert: வருகிற 2-ம் தேதி வங்கக் கடலில் புயல்? தமிழ்நாட்டில் எங்கெங்கே மழை? வானிலை மைய அப்டேட்!

இந்திய வானிலை மையம் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது.“தெற்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக... மேலும் பார்க்க

பூடான்: `பனிப்பாறை ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு' - மேற்கு வங்கம், அசாமுக்கு எச்சரிக்கை

பூடான் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள காசா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷிந்தாபு பனிப்பாறை ஏரி. மோ சூ ஆற்றின் உற்பத்தியிடத்தில் அமைந்துள்ள ஷிந்தாபு ஏரி, பூடானின் 17 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் ஒன்றாகக... மேலும் பார்க்க

`நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு கலப்பதும்‌கூட காரணம்!' - சுற்றுச்சூழல் அமைச்சர் அடடே விளக்கம்

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வழியும் பிரச்னைக்கு, பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத... மேலும் பார்க்க

Arnab: 3 மணிநேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்; வானிலை மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது.இந்திய வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி,“ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண... மேலும் பார்க்க