செய்திகள் :

''மெய்யழகன்' பிரேம் குமாருடனான படம் எப்போது ரிலீஸ்?' - பகத் பாசில் கொடுத்த அப்டேட்

post image

'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'.

நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தை பகத் பாசில் தனது பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

'பெத்லகேம் குடும்ப யூனிட்'
'பெத்லகேம் குடும்ப யூனிட்'

இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (செப். 2) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பகத் பாசில், "முதலில், எங்கள் படக்குழு சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

நிவின் பாலி, மமிதா பைஜூ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.

எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

அந்த வகையில், 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படமும் எங்களுக்கு மிகவும் சிறப்பான படமாகும். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

இது மிகவும் அழகான மற்றும் சிறப்பான திரைப்படம். நல்ல திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஃபஹத் பாசில்
ஃபஹத் பாசில்

அந்த வகையில், இப்படம் உலகம் முழுவதும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பிரேமுடன் நான் இணைந்து பணியாற்றியுள்ள அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

அப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

"தயவுசெய்து படத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்தை..!"- டாக்ஸிக் குறித்து சரத்குமார்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டாக்ஸிக்’. இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி வெளியான இந்தப் படம்... மேலும் பார்க்க

Vijay: "முதல்வரிடம், 'நீங்களே நல்லா பார்த்துக்கோங்க’ என்றேன்” - என்ன சொல்கிறார் நடிகர் கார்த்தி?

சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படக்குழு தீவிர புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை பரவை பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

Hi Movie: "நம்ம படம் ஓடுமா? ஓடாதா? என்ற பயம் இருந்துச்சு, ஏன்னா.!" - கவின்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேச... மேலும் பார்க்க

Hi Movie: "நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.!"- கிண்டலடித்த ராதிகா

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேச... மேலும் பார்க்க

Ilaiyaraaja: 'எப்பவும் நான் ராஜா'; கார்த்திக் சுப்புராஜ் டு மாரி செல்வராஜ் - இளையாராஜாவின் லைன் அப்

இளையராஜா இசையமைத்திருக்கும் 'டோரதி' படத்தின் பாடல்கள்தான் இப்போது சார்ட்பஸ்டர். இந்தப் படத்தின் பாடல்களை அவரே எழுதியும் இருக்கிறார்.கார்த்திக் சுப்பராஜின் இந்த 'டோரதி', மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி', த... மேலும் பார்க்க

I’m Game: ``மாஸ்டர் படத்தில் அர்ஜூன் தாஸ் கேரக்டர் எனக்குதான் வந்தது" - நடிகர் ஆண்டனி வர்கீஸ்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர... மேலும் பார்க்க