செய்திகள் :

மெலோனிக்கு 'Melody' சாக்லெட்டை கிஃப்ட் செய்த பிரதமர் மோடி; வைரலான வீடியோ - எகிறிய Parle பங்குகள்!

post image

ஐந்து நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று இத்தாலிக்கு சென்றிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

இத்தாலி பிரதமர் மெலோனியும், மோடியும் நல்ல நண்பர்கள். இருவரின் பெயரை இணைத்து 'Melodi' என்று கிரியேட் செய்யப்பட்ட ஹேஷ்டாக் சமூக வலைதளத்தில் செம்ம வைரல்.

இதை நினைவாக, இத்தாலி சென்றிருக்கும் மோடி, மெலோனிக்கு 'மெலோடி' சாக்லேட் பாக்கெட்டைப் பரிசளித்திருக்கிறார்.

அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் மெலோனி.

மெலோடி சாக்லேட் Parle Industries உடையதாகும்.

இந்த வீடியோ வெளியானதற்குப் பிறகு, Parle Industries உடைய பங்குகள் உயர்ந்துள்ளது.

Parle Industries
Parle Industries

இன்று காலை 9.15 மணிக்கு ரூ.5-க்கு தொடங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகள், ஒரு மணிநேரத்திலேயே ரூ.4.84 வரை இறங்கியிருந்தது.

ஆனால், இந்த வீடியோ வெளியானதற்குப் பிறகு, தற்போது ரூ.5.25 என வர்த்தகமாகி வருகிறது.

ஒரு வார தரவுகளை எடுத்து பார்க்கும் போது, இந்த நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ரூ.5.05 வரை தான் சென்றுள்ளன. ஆனால், இப்போது இந்த வீடியோவிற்குப் பிறகு ரூ.5.25 என வர்த்தகமாகி வருகிறது.

இந்த விலை உயர்வு பெரியளவிலான மாற்றம் இல்லை தான். ஆனாலும், கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இந்தப் பங்கின் விலை உயர்விற்கு இது தான் காரணமா என்று உறுதியாக கூற முடியவில்லை. அதே நேரத்தில், சமூக வலைதளத்தில் இது தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு; அடுத்து எந்தத் துறையின் பங்குகள் விலை ஏறப்போகின்றன தெரியுமா? - கவனிங்க!

ஈரான் போர் தொடருமா... அல்லது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னதுபோல விரைவில் முடிவுக்கு வருமா என்பதெல்லாம் ட்ரம்பின் கையிலும், அவரது வார்த்தைகளிலும்தான் உள்ளது. விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று ஒரு நா... மேலும் பார்க்க

2025-ல் மிஸ் செய்தவர்கள்; மீண்டும் அந்தத் தவறை செய்ய வேண்டாம்- Silver ETF கவனிக்க வேண்டிய நேரம் இது!

2025-ம் ஆண்டு சர்வதேச அளவில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸிற்கு கிட்டத்தட்ட 150 சதவிகிதம் வரையில் சென்றது. எப்போதுமே இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது தான் அதிக ஃபோக்கஸ். வெள்ளியை அவ்வளவாக கவனிக்கமாட்டார... மேலும் பார்க்க