செய்திகள் :

"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்

post image

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஆனால் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ``மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்" என்று அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

மேகதாது
மேகதாது

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "மேகதாதுவில் அணை கட்ட எந்தக் காலத்திலும் முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட வரைவை மட்டுமே தாக்கல் செய்யுமாறு கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதை மீறி அவர்கள் பூமிப் பூஜை செய்வதாகக் கூறினார்கள்.

அதனால், அதை செய்யக் கூடாது என தேசிய பசுமை தீர்பாயத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக முறையிட்டுள்ளோம்.

அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளதால், இந்த இடைப்பட்ட சமயத்தில் அவர்கள் பூமிப் பூஜை செய்ய முடியாது.

தேவையில்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை டி.கே.சிவக்குமார் மேற்கொள்கிறார். இரு மாநிலங்களுக்கும் அமைதி தேவை.

டி.கே. சிவக்குமார்
டி.கே. சிவக்குமார்

இரு மாநில மக்களிடையே தொழில் உறவுகளும் நிறைய உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக தேவையில்லாமல் டி.கே.சிவக்குமார் இதுபோல் செய்துவருகிறார். இதுபோல் சர்ச்சையைக் கிளப்புவதை அவர் நிறுத்த வேண்டும்.

இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே கொள்கைகள் இருக்கின்றன. மாநிலங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால் மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசியிருக்கிறார்" என்றார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் மதிமுக - பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு வெளியிடும் வைகோ?

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக கூட்டணி மறுசீரமைப்பு வேகமெடுத்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு ஜ... மேலும் பார்க்க

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க