செய்திகள் :

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மீண்டும் இன்று தேர்தல்: 'எங்களுக்கு தான் பெரும்பான்மை' - திரிணாமுல்

post image

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகியவை சட்டமன்ற தேர்தல் முடிந்து, ரிசல்டுக்காக காத்திருக்கின்றன.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) தான், மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தலை சந்தித்து முடித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது.

மக்ரஹத் பச்சிம் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் துறைமுகம் தொகுதியில் 4 வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

எதற்காக இந்தத் தேர்தல்?

இந்த இரண்டு தொகுதிகளிலும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று 29 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கொடுத்த அறிக்கையின் படி, மீண்டும் இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படுகின்றன.

புகார் கொடுத்தது யார்?

இந்த இரு தொகுதிகளிலுமே திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் ஆதிக்கம் கொண்டது ஆகும்.

இந்த இரு தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக அளித்த புகாரில் இன்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தரப்போ, 'இந்த இரு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெற்றி பெறும் என்பது தெரிந்து, பாஜக மறுதேர்தலை கேட்டுள்ளது.

இருந்தாலும், மக்களின் பதில் பாஜகவிற்கு எதிராகத்தான் வரும்" என்று கூறுகிறது.

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விசிகவினர் தேர்தல் பணிகள் குறித்து ... மேலும் பார்க்க

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' - திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியுள்ளதாவது..... மேலும் பார்க்க

'பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று தான் ஈரான் போர்!' - ட்ரம்ப் காட்டம்

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று - ஈரான் செய்து வரும் அணு ஆயுதத் தயாரிப்பு. இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணமும் - இரு தரப்... மேலும் பார்க்க

ஈரான் Lock ஆன '5' விஷயங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் விளைவு!

ஈரான் - அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எத... மேலும் பார்க்க