செய்திகள் :

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

post image

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’.

மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​படம் கடந்த ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்​பைப் பெற்​றிருந்தது.

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர்.

'மொத ராத்திரி'
'மொத ராத்திரி'

இந்நிலையில் ‘மொத ராத்​திரி' படத்தைப் பார்த்த நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.

"நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்தேன், 'மொத ராத்திரி' படத்தின் திரைக்கதை, கண்களைக் கவரும் விசுவல், கதை சொல்லல் மற்றும் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு வாய்விட்டு சிரித்ததுடன், ரசித்துக் கைதட்டவும் செய்தேன்.

இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள், உங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன், இந்தப் படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று'' என்று பாராட்டியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்ந... மேலும் பார்க்க

``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

"விடுதலை படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்"- சூரி

நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சூரி, "எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன... மேலும் பார்க்க

மண்டாடி : 'பிரம்மிப்பா இருக்கு.!'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி

மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்... மேலும் பார்க்க

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

Rishikanth: "எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள்..." - நெகிழும் ரிஷிகாந்த்

நீண்ட கால முயற்சிக்குப் பிறகு நடிகர் ரிஷிகாந்துக்குத் தற்போது வெற்றி நாற்காலி கிடைத்திருக்கிறது. அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'மொத ராத்திரி' மற்றும் 'டோரதி' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல... மேலும் பார்க்க