செய்திகள் :

`மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்' - வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன?

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம் ஆகிய பிரிவுகளில் மூன்று தனித்தனி வழக்குகள் நடந்து வருகின்றன.

ட்ரம்ப் கடிதம்

இந்த வழக்குகளுக்கான விசாரணை 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலை பொறுத்தவரை, ஆட்சியில் இருக்கும் பிரதமர் வழக்குகளை சந்திப்பது இதுவே முதல்முறை.

இந்த வழக்குகளில் நெதன்யாகுவிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

நெதன்யாகு மன்னிப்பு

இந்த நிலையில், நெதன்யாகுவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐசக் ஹெர்சாக்கிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார். இதை நெதன்யாகுவின் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

ஐசக் ஹெர்சாக் என்ன சொல்கிறார்?

இந்தக் கடிதம் குறித்து ஐசக் ஹெர்சாக்கின் அலுவலகம் கூறியுள்ளதாவது...

"இந்தக் கடிதம் அசாதாரணமானது மற்றும் மிக முக்கியமானது. இது குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் அனைவரின் கருத்துகளைப் பெற்றப்பின், அதிபர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பார்" என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் அதிபரின் பதிலை பொறுத்தே நெதன்யாகுவின் அடுத்தடுத்து அரசியல் பக்கம் அமையும்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ... மேலும் பார்க்க

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album

இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் ப... மேலும் பார்க்க

``உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது"- அமைச்சர் ஜெய்சங்கரின் 'அபாய குறியீடு' உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பி... மேலும் பார்க்க

கோவை அடுக்குமாடி குடியிருப்புக் கொள்ளை சம்பவம் - சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.கவுண... மேலும் பார்க்க