செய்திகள் :

``ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்'' - `மாநாடு' படம் குறித்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

post image

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

மாநாடு - சிம்பு, கல்யாணி
மாநாடு - சிம்பு, கல்யாணி

இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான time loop பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.

அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள்.

மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு
மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு

பரிச்சார்த்த முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.

"இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது"- சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர்,... மேலும் பார்க்க

AK64: `பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன்’ - அஜித் உடனான அடுத்த படம் குறித்து ஆதிக்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து 'பகீரா', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்த... மேலும் பார்க்க

Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வ... மேலும் பார்க்க