செய்திகள் :

'ரஜினிக்கு 18% வாக்கு வங்கி இருந்தது; அதனால்தான் திமுக சூழ்ச்சி செய்தது! - ஆதவ் விளக்கம்!

post image

தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினியை பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் பெரிதாகி ரஜினியே அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்தும் ஆதவ் அர்ஜூனா இந்நிகழ்வில் பேசியிருந்தார்.

Aadhav
Aadhav

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'தலைவர் சிபிஐ விசாரணைக்கு சென்று விட்டு வரும் போது தேர்தல் தேதியை அறிவித்து விட்டார்கள். அண்ணனின் காரில் பின்னால்தான் உட்காந்திருந்தேன். வெளியில் 2000 பேர் இருந்தார்கள்.

திடீரென ராயப்பன் கேரக்டரை போல மேல க்ளாஸ ஓபன் பண்ணுங்க என்றார். 'என்ன அர்ஜூன் இங்க இருந்தே ஆரம்பிச்சுரலாமா?' எனக் கேட்டார். தலைவர் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஒரு மாதமாக திமுக செட் செய்த நரேட்டிவை தலைவர் உடைத்துவிட்டார்.

Aadhav
Aadhav

நம்முடைய தலைவரே ரஜினி ரசிகர் என கூறுபவர். கடந்த ஒரு வாரமாக நானும் தலைவரும் கடும் மனவலியில் இருக்கிறோம். தூத்துக்குடி மாணவியின் கொலையை மறைக்கத்தான் ஒரு வாரமாக வேறுவிதமான பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். அந்த வீட்டுக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை? என்கிற ஆதங்கத்தில்தான் முட்டாள் முதல்வர் எனப் பேசியிருந்தேன். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ரஜினி மீது எங்களுக்கு அன்பு மட்டுமே இருக்கிறது. இந்த நோன்பு மாதத்தில் சொல்கிறேன், தவெக தனித்துதான் போட்டியிடுகிறது. 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள். ஆனால், தலைவர் மக்களுக்காக தனித்து நிற்க வருகிறார்.

Aadhav
Aadhav

ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக சொன்னபோது நான் திமுகவில் தேர்தல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எடுத்த சர்வேயில் ரஜினிக்கு 18% வாக்கு இருந்தது. அதனால்தான் திமுக அவர் மீது போலி பிரசாரங்களை முன்னெடுத்தது. அதைத்தான் அன்று சொல்ல வந்தேன். அது ரஜினி சாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.' என்றார்.

'ரஜினியை பற்றி பேசினால்...' - ஆதவ் இருந்த மேடையிலேயே கொந்தளித்த ரஜினி ரசிகர்

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே 'ரஜினியை யாரும் தவறாக... மேலும் பார்க்க

ஆளுநர் ரவி கொடுத்த லிஸ்ட்.! - மாற்றத்துக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்!

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாற்றத்தைக் கையில் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக, தமிழகத்தில் நான்கு மாவட்ட ... மேலும் பார்க்க

`நடிகை மீது தரம் தாழ்ந்த விமர்சனம்; மனநிலையும் வளர்ப்புமே..!' - சி.வி.சண்முகத்திற்கு குஷ்பு கண்டனம்

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக, தி.மு.க அரசை கண்டித்து மாநிலங்க... மேலும் பார்க்க

'தனி ரூட்டில் ஆதவ்; அப்செட் ஆன விஜய்; ரஜினி வழி 'செக்' ! - குஷியில் ஆனந்த்!

மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவ... மேலும் பார்க்க

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்...அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி அரவக்குறிச்சி. டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுத... மேலும் பார்க்க

மொஜ்தபா, நெதன்யாகு நிலை என்ன? - காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்யாவில் சிகிச்சையா?!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் எப்போது முடியும் என்று தெரியாமல் இருக்கிறது. இப்போர் காரணமாக உலக நாடுகளுக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்... மேலும் பார்க்க