செய்திகள் :

ரயிலில் திருட்டு போன பேக்; மும்பை தெருக்களில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்

post image

மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மும்பை மலாடு பகுதியில் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட வாலிபர் ஒருவர் யாசகம் பெறுவதை பார்த்து அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரால் சரியாக பேச முடியவில்லை. அவர் மன அழுத்ததில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று நன்றாக குளிக்க வைத்து சாப்பாடு வாங்கிக்கொடுத்தனர். அவர் ஓரளவுக்கு பழைய நிலைக்கு வந்ததும் அவரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரது பெயர் அபய் என்றும், நாண்டெட்டில் உள்ள கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவம் மூன்றாவது ஆண்டு படிப்பதாக தெரிவித்தார். உடனே அவர் சொன்ன நாண்டெட் தம்ஷா பகுதி போலீஸாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அங்கு அபய் போன்ற ஒருவரை காணவில்லை என்று புகார் பதிவாகி இருந்தனர். புகார் கொடுத்தவர் தனது போன் நம்பரை கொடுத்திருந்தார்.

அந்த நபருக்கு போன் செய்தபோது அது மும்பையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அபய் தந்தை என்று தெரிய வந்தது. உடனே அவரது தந்தையை வரவழைத்து இது குறித்து தெரிவித்தனர். புகைப்படத்தை இரு போலீஸ் நிலையத்திலும் பகிர்ந்து அது அபய் என்று உறுதி செய்யப்பட்டது. அபய் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் மூலம் மும்பைக்கு வந்துள்ளார். அவர் ரயிலில் வரும்போது அவரது பேக் திருட்டு போய்விட்டது. அபய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரால் தனது பெற்றோர் அல்லது உறவினரின் போன் நம்பரை நினைவுபடுத்த முடியவில்லை.

எனவே பிழைப்புக்கு தெருக்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். போலீஸார் கொடுத்த தகவலை தொடர்ந்து அபய் தந்தை உடனே மும்பைக்கு கிளம்பி வந்தார். அவரிடம் போலீஸார் அபயை ஒப்படைத்தனர். அபய் மன அழுத்ததுக்கு நாண்டெட்டில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று அபய் தந்தை தெரிவித்தார். அபயை போலீஸ் நிலையத்தில் பார்த்ததுவும் அவரது தந்தை அப்படியே ஆனந்த கண்ணீர் வடித்தார். தனது மகனை கண்டுபிடித்து கொடுத்ததற்காக மும்பை போலீஸாருக்கு அபய் தந்தை நன்றி தெரிவித்துக்கொண்டார். அபய் தந்தை ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க