"என் அரசியல் ஒதுக்கிவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்றால், எனக்கு உடன்பாடி...
ரயில்களின் நேரம் மாற்றம்: எந்த ரயில், எப்போது புறப்படும்? நேர அட்டவணை; முழு விவரம்!
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இந்த வருடாந்திர கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணை முதல்கட்டமாக தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்குப் பதிலாக 10.40 மணிக்குப் புறப்படும்.
எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்குப் புறப்படும்.
எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்குப் புறப்படும்.
எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்குப் புறப்படும்.
எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும்.
எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்குப் புறப்படும்.
எழும்பூரில் மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்குப் புறப்படும்.
எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை.
நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 8.50-க்குப் புறப்படும்.
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்குப் பதிலாக மதியம் 12.10 மணிக்குப் புறப்படும்.
செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும்.

ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்குப் புறப்படும்.
தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்குப் பதிலாக 9.05 மணிக்குப் புறப்படும்.
இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாகப் புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.
மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



















