செய்திகள் :

ரஷ்யா - உக்ரைன் போர்: "8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த எனக்கு இதை நிறுத்துவது ஈசி" - ட்ரம்ப்

post image

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 4, 2026), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போர் குறித்து போன் காலில் பேசிக்கொண்டனர்.

அதன் பின்னும், ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அவரது பதில்...

"இந்தப் போரை முடிக்க வேண்டும் என்று புதினும் விரும்புகிறார். உக்ரைனும் விரும்புகிறது. நாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்... இதை நம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடிகிறதா என்று பார்ப்போம். இது ஒரு கொடூரமான விஷயம்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

நான் ஏற்கனவே 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். என் கணிப்புப்படி, இந்தப் போரை முடிப்பது அதைவிட எளிதான ஒன்றாகத்தான் இருக்கும். ஏன்னென்றால், எனக்கு இரண்டு நாட்டுத் தலைவர்களையுமே நன்றாகத் தெரியும்.

நான் முன்பு முடிவுக்குக் கொண்டுவந்த மற்ற போர்களில் இருந்த பல நாட்டுத் தலைவர்களை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.

நான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளுக்கு இடையே வரவிருந்த போர்களைத் தடுத்து நிறுத்தினேன். அது உண்மையிலேயே அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடிய ஒரு மோசமான சூழல்.

பாகிஸ்தான் பிரதமரே கூறியது போல, ஒருவேளை அந்தப் போர் நடந்திருந்தால் கிட்டத்தட்ட 40 மில்லியன் அல்லது 50 மில்லியன் (4 முதல் 5 கோடி) மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.

ஆனால், இந்த உக்ரைன் போரைப் பொறுத்தவரை, மக்கள் நினைப்பதை விட நாம் தீர்வுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

அதிபர் புதின் இதை முடிக்க விரும்புகிறார் என்பதை நான் மிகவும் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது.

இப்போது அதிபர் ஜெலென்ஸ்கியும் கூட இதை முடிக்கத்தான் விரும்புகிறார். நாம் அடுத்து நேட்டோ மாநாட்டிற்குச் செல்லவிருக்கிறோம். அங்கு இதைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்".

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் - ஒப்புதல் அளிக்க கூடுகிறது தமிழக அமைச்சரவை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க