செய்திகள் :

`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!' – பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி

post image

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், ``புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த ஐந்து மாதங்களாக இலவச அரிசியை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி 350 ரூபாய்.

ஆனால் இங்கு பயனாளிகளுக்கு 320 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம்
புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம்

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்ததில் இருந்து ஆண்டுக்கு 2,000 பேர் என மொத்தமாக 10,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் வெறும் 2,400 பேருக்குத்தான் இவர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகத்தான் 12 நாட்கள் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். முதல் கட்டமாக 21.01.2026 அன்று தொடங்கும் இந்தப் பாத யாத்திரையை 23 தொகுதிகளில் நடத்த இருக்கிறோம்.

பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே இருக்கிறது. அவர் மட்டும் இல்லையென்றால் அவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்கள்" என்றார்.

ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்

மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொட... மேலும் பார்க்க

Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்" - சசிகலா

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி... மேலும் பார்க்க

NDA கூட்டணி: "நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்" - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்ப... மேலும் பார்க்க

`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?

வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி... மேலும் பார்க்க

"அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.... மேலும் பார்க்க

``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!" - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பி... மேலும் பார்க்க