`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி
ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்
மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது.
யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன" என்றார்.
இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்?" என்றார்.

















