`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி
தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சுமன் சிங் மனைவி ரேனு தேவிக்கு, மாலதி தேவி என்ற பெண்ணுடன் தன்பாலின உறவு இருந்தது தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உறவு நீடித்து வந்தது. மாலதி தேவி எப்போதும் தனது தோழி ரேனு வீட்டில்தான் இருப்பார். இருவருக்கும் இடையே தன்பாலின உறவு இருப்பது குறித்து தெரிந்தவுடன் சுமன் சிங் குடும்பத்தினர் மாலதி தங்களது வீட்டிற்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் மாலதியும், ரேனுவும் சேர்ந்து வாழ முடிவு செய்திருந்தனர். இதற்கு ரேனுவின் கணவன் தடையாக இருந்தார். இதையடுத்து சுமன் சிங்கை கொலை செய்ய ரேனுவும், மாலதியும் சேர்ந்து முடிவு செய்தனர்.

இதற்காக ஜிதேந்திரா குப்தா என்பவரை மாலதி தொடர்பு கொண்டு சுமன் சிங்கை கொலை செய்ய பேரம் பேசினார். ரூ.60 ஆயிரத்திற்கு சுமன் சிங்கை கொலை செய்ய ஜிதேந்திரா குப்தா ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று சுமன் சிங் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அவரை ஜிதேந்திராவும், அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் ராம்பிரகாஷ் ஆகியோர் தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் தோட்டத்தில் வைத்து சுமன் சிங்கை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். அதோடு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் ரேனு மற்றும் மாலதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் இக்கொலையில் தொடர்பு இருப்பதை ரேனு ஒப்புக்கொண்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜிதேந்திரா தலைமறைவாகிவிட்டார். அவரது கூட்டாளி ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பேரிடமிருந்து மொபைல் போன்கள் மற்றும் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய கயிறு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலதிக்கு இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


















