செய்திகள் :

குஜராத்தியின் 'Betti', அமெரிக்க கடற்படை கேப்டன், NASA வீராங்கனை - சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு |Timeline

post image

வானம்... நிலா... நட்சத்திரத்தைப் பார்த்து, 'அங்கே போக வேண்டும்' என்று கனவு காணும் நம் குழந்தைகளின் இன்ஸ்பிரேஷன்களில் ஒருவர் - சுனிதா வில்லியம்ஸ்.

விண்வெளி வீராங்கனை என்ற ஆச்சரியத்தைத் தாண்டி, சுனிதா வில்லியம்ஸை நாம் மிக நெருக்கமாக பார்க்கும் காரணம் - அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால். ஆம்... இவரது தந்தை குஜராத்தை சேர்ந்தவர் ஆவார்.

2025-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நாசாவில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றிருக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்
அவருடைய வாழ்க்கை டைம்லைனை சற்று புரட்டி பார்க்கலாம். வாங்க...

செப்டம்பர் 19, 1965 - அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் பிறந்துள்ளார். இவரது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். தாய் ஐரோப்பாவைச் சேர்ந்தவர் ஆவார்.

1987 - அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

அதே ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

1989 - அமெரிக்க கடற்படையில் விமானியாக பணி உயர்வு பெற்றிருக்கிறார். அமெரிக்க கடற்படை விமானியாக வளைகுடா போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்.

1993 - அமெரிக்க கடற்படை சோதனை விமானி பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்.

1995 - புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இருந்து கேப்டனாக பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அதுவரை அவர் 30-க்கும் மேற்பட்ட விமானங்களை கிட்டத்தட்ட 3,000 மணிநேரம் இயக்கி இருக்கிறார்.

1998 - அந்த ஆண்டில் தான் நாசாவால் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2006, 2012, 2024 - 2025 என இதுவரை மூன்று முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார் இவர்.

சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்

இவரது கடைசி விண்வெளி பயணத்தை யாராலும் மறக்க முடியாது. அவர் சென்ற விண்கலத்திற்கு ஏற்பட்ட கோளாறினால், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளிக்கு சென்ற இவர், 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி தான் பூமிக்கு திரும்பினார்.

விண்வெளியில் மராதான் ஓடிய முதல் பெண்மணி... விண்வெளி நடைப்பயணத்தில் சாதனை செய்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார்.

சிறுமியாக இருந்தப் போது, அப்போலோ விண்கலம் நிலாவில் தரையிறங்குவதைப் பார்த்து வந்த கனவு, அவரை விண்வெளியில் மொத்தமாக 608 நாள்கள் கழிப்பது வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

ஆக, கனவு காணுங்கள் மக்களே!

ISRO : '3வது ஸ்டேஜின் இறுதியில் கோளாறு' - காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த PSLV-C62, இப்போது?!

இன்று காலை PSLV-C62 ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO). ஆனால், இந்த வெற்றி நீடிக்கவில்லை. ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந... மேலும் பார்க்க