செய்திகள் :

’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம்

post image

நீட் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லியில் பிரதமர் வீடு அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார், “பாசிச கொள்கைக்கு எதிராக புதுடெல்லியில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக ராகுல் காந்தியை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி, தள்ளுமுள்ளு செய்து, தாக்கியதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்  உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலாகும்.

மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தடியடியின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், இன்று அவர்களுக்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்களையே தாக்கி கைது செய்திருப்பது, மோடி அரசின் சர்வாதிகார மனநிலையையும், ஜனநாயக விரோத முகத்தையும் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை. அந்த உரிமையைக் கூட பறித்து, எதிர்க்கட்சியின் குரலை காவல்துறையின் பலத்தால் அடக்கலாம் என்று நினைப்பது "வினாச காலே விபரீத புத்தி" என்ற பழமொழிக்கே எடுத்துக்காட்டாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல முடியாத ஆட்சி, எதிர்க்கட்சியினரை அடக்குமுறையால் மிரட்ட முயல்கிறது. ஆனால் வரலாறு சொல்லும் உண்மை ஒன்று உண்டு. அடக்குமுறை எப்போதும் நிரந்தர வெற்றியைப் பெற்றதில்லை; மக்கள் சக்தியே இறுதியில் வெற்றி பெற்றுள்ளது.

பாசிச மற்றும் நாசிச சிந்தனைகளை திணித்து, ஜனநாயக நிறுவனங்களை சீரழித்து வரும் ஆர்.எஸ்.எஸ்–பாஜக ஆட்சியின் அடக்குமுறைக்கு இந்திய மக்கள் விரைவில் ஜனநாயக வழியில் தக்க பதிலடி கொடுப்பார்கள். இந்தியாவில் மீண்டும் ஒரு மாபெரும் ஜனநாயகப் புரட்சி மலரும். மக்கள் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாக இருக்கும். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலையும், கைது நடவடிக்கையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Post: 25,000 முதல் 75,000 வரை பரிசு; இந்திய அஞ்சல் துறைக்குப் புதிய அடையாளம் தேடும் போட்டி!

இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்"- ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இள... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" - ஆதவ் அர்ஜுனா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "பாதுகாக்க வேண்டியர்களைப் பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை" - பும்ரா மனைவி கண்டனம்|live Updates

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளை... மேலும் பார்க்க

சென்னையில் போராடிய மாணவர்கள் கைது: "ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" - உதயநிதி கண்டனம்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க