வன்னியா் இளைஞா் மாநாடு: கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலை நடத்தியது.
அந்தத் தாக்குதலுக்கு 'Bunyan Un Marsoos' எனப் பெயர் வைத்தது. இந்த வார்த்தை எப்படி வந்தது என்பது குறித்து AIMIM கட்சியின் தலைவரும், தெலங்கானா எம்.பி-யுமான அசாதுதின் ஓவைசி பேசியிருக்கிறார்.
#WATCH | Hyderabad, Telangana | AIMIM chief Asaduddin Owaisi says, "... Pakistan has named their new attack 'Bunyan-al-Marsoos.' This is from a verse in the Quran Sharif in which Allah says that if you love Allah, then stand like a solid wall. But the Pakistan Army and… pic.twitter.com/jpnd1dMnYb
— ANI (@ANI) May 10, 2025
இது தொடர்பாக வெளியான வீடியோவில், "பாகிஸ்தான் அவர்களின் புதிய தாக்குதலுக்கு 'புன்யான்-அல்-மர்சூஸ்' என்று பெயரிட்டுள்ளது.
இது குர்ஆனில் உள்ள ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் அல்லாஹ், 'நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால், ஒரு உறுதியான சுவரைப் போல நில்லுங்கள்' என்று கூறுகிறார்.
ஆனால் பாகிஸ்தான் இராணுவமும், அரசும் தீவிரப் பொய்யர்கள். முந்தைய அதே வசனத்தில், 'நீங்கள் செய்யாத விஷயங்களை ஏன் சொல்கிறீர்கள்' என்று அல்லாஹ் கேட்கிறார்.
உண்மையில் அவர்கள் குர்ஆனின் முழு நோக்கத்தையும் புரிந்து கொள்ள விரும்பாத அளவுக்குப் பொய்யர்கள்.
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள வங்காள முஸ்லிம்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது மட்டும் ஒரு சுவரைப் போல நிற்க மறந்துவிட்டார்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY