செய்திகள் :

ராமநாதபுரம்: சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்… துர்நாற்றத்தில் தவிக்கும் நம்புதாளை மக்கள்!

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் ECR சாலையிலிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள 2-வது வார்டு பகுதியில், கடந்த சில மாதங்களாகக் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலையில் தேங்கியும் வழிந்தோடியும் செல்லும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, செல்வமுத்து மாரியம்மன் வழிபாட்டுத்தலம் மற்றும் நான்கு குடிநீர்க் குழாய்கள் அமைந்துள்ள பகுதியிலும் இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குடிநீர் பயன்படுத்தும் மக்களுக்கும், வழிபாட்டுத்தலத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கும் சுகாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழியாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் கழிவுநீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றச் செயலரிடம் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சென்றும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கழிவுநீர் பிரச்னைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டும் என்பதே நம்புதாளை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

"விரைவான பதில்களை விட, வேகமான செயல்பாடு தான் சிறந்தது"- ஆந்திரா அமைச்சர் கிண்டலுக்கு கீர்த்தனா பதில்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் மடைமாறுவது சமீபத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆந்திரா அமைச்சர் கிண்டல்இந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) ஆந்திரா அமைச்சர் லோகேஷ் நாரா தனது எக்ஸ... மேலும் பார்க்க

ரூஸ்வெல்ட் - சர்ச்சில் - ஜோசப் ஸ்டாலின் இடத்தில் ட்ரம்ப் - ஷி - புதின்? புதிய 'யால்டா'வா இது?

உலக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வியாழக்கிழமை சீனாவின் ஷென்சென்னில் சந்தித்துப் பேசினர். ஆசிய-பசி... மேலும் பார்க்க

"காங்கிரஸ் இந்தியாவை ஏன் ஏழை நாடாகவே வைத்திருந்தது?" - காங்கிரஸிடம் கிரண் ரிஜிஜூ 4 கேள்விகள்

சீனாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மூவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து நேற்று (நவம்பர் 20) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ... மேலும் பார்க்க

பன்னூனைக் கொல்லச் சதி: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவில் 19 ஆண்டுகள் சிறை! - என்ன நடந்தது?

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவுக்கு (55) அமெரிக்க நீதிமன்றம் நேற்று (நவம்பர் 20... மேலும் பார்க்க

"இந்தியாவைப் பாருங்கள்: வட்டி விகிதம் குறைவு, GDP வளர்ச்சி அதிகம்!" - US Fed வங்கியை சாடும் ட்ரம்ப்

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.75-4% ரேஞ்சிற்குள் உயர்த்தியது. இதற்குப் பணவீக்கம் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வட்டி விகித உயர்வ... மேலும் பார்க்க