செய்திகள் :

``ரீல்ஸ் மூலம் முதலீடு ஈர்ப்பா? இங்க என்ன நடக்குது?" - கொதிக்கும் தமிழிசை சௌந்தரராஜன்!

post image

தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி நிர்வாகத் திறமையின்றி தவிப்பதாகவும், தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் போட்டு முதலீடு கேட்பதாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே 15-க்கும் மேற்பட்ட பிரச்னைகள் எழுந்துள்ளன. இது இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. மின்தடை, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயலற்ற தன்மை எனப் பல புகார்கள் எழுந்துள்ளன. டாஸ்மாக்கில் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது இன்னும் தொடர்கிறது.

தவெக அமைச்சர் கீர்த்தனா
தவெக அமைச்சர் கீர்த்தனா

இவற்றையெல்லாம் விடக் கொடுமையாக, ஒரு மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் (Reels) போட்டு, அதன் மூலமாக முதலீடுகளை ஈர்க்க முயல்கிறார். இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த நிர்வாகச் சீர்கேடுகளை அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

அ.தி.மு.க-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்து, உடனே பதவிகளை ராஜினாமா செய்துள்ள நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. பா.ஜ.க இன்று இந்தியாவின் 21 மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் மக்களைக் கவர்ந்து, மக்களால் விரும்பப்படும் கட்சியாக இருக்கிறோம். ஏதோ 'பிள்ளை பிடிப்பது' போல குறுக்கு வழியில் நாங்கள் இடங்களைப் பிடிக்கவில்லை.

அரசியலில் தோல்விகள் சகஜம். அன்று வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடங்கிய பா.ஜ.க, இன்று நாடாளுமன்றத்தையே ஆளும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் ஒரு நாள் பா.ஜ.க நிச்சயம் பலம் பெறும். அதற்கான அச்சாரம் தான் தற்போது நடந்து வரும் கூட்டங்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்களிடம் தான் மேகதாது குறித்துக் கேட்க வேண்டும். பா.ஜ.க என்றும் தமிழக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும்." என்றார்

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க