செய்திகள் :

'ரூ.14 லட்சம் ரொக்கம்; 153 ஏ.டி.எம் கார்டுகள்; 52 செல்போன்கள்' - போலீஸாரை அதிர வைத்த கும்பல் கைது?

post image

திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸார் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், அந்த அறையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில் ரூ.14,40,000 ரொக்கப் பணம், 153 ஏ.டி.எம் கார்டுகள், 52 உயர்தர ஆண்ட்ராய்டு செல்போன்கள், 21 சிம் கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரம், மடிக்கணினி, மோடம், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

trichy
trichy

இதுகுறித்து, கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (28), பழனி முருகன் (29), ராஜ்குமார் (22), பிரவீன் (24), முத்தமிழ்செல்வன் (24) மற்றும் அஜ்மீர் அலி (32) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் நஸ்ருதீன், தனது வீட்டைக் காலி செய்து தருமாறு வலியுறுத்தியபோது, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியதும் விசாரணையில் அம்பலமானது.

வீட்டு உரிமையாளரை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தது, பலரது ஏ.டி.எம் கார்டுகளைத் திருடியது, போலி ஆவணங்கள் தயாரித்துக் கூட்டுச்சதியில் ஈடுபட்டது மற்றும் ஆன்லைன் பண மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 6 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க