செய்திகள் :

’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ - கோவை மாநகராட்சி சர்ச்சை

post image

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் தியாகராஜன், “கோவை மாநகராட்சியில் கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் 2026 ஜூன் வரை நடைபெற்ற திட்டப் பணிகளுக்குச் செலவிடப்பட்ட தொகை தொடர்பாக, மாநகராட்சி கணக்குப் பிரிவில் பராமரிக்கப்படும் கணக்கு பதிவேடு ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தேன்.

அதன்படி மொத்தம் 9,834 பக்க ஆவணங்களைப் பெற்றேன். அந்த ஆவணங்களைப் பார்த்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

தியாகராஜன்
தியாகராஜன்

‘வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்’

மாநகராட்சி விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நிகான் கேமரா வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்து 500 என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த விலை அதிகமாகத் தெரிந்ததால் ஆன்லைனில் அக்கேமரா விலையைத் தேடிப் பார்த்தபோது, ரூ.2.45 லட்சம் மட்டுமே இருப்பது தெரியவந்தது. பின்னர் மாநகராட்சி கேமரா வாங்கிய அதே கடையில், அதே வசதிகளுடன் கூடிய அதே கேமராவிற்கான விலைப்பட்டியலைக் கேட்டு வாங்கினேன்.

அதிலும், அதன் விலை ரூ.2.45 லட்சம் மட்டுமே. ஒரே வசதிகளுடன் கூடிய கேமராவிற்கு எப்படி ரூ. 2 லட்சம் வித்தியாசம் இருக்கும்? இதில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரு சிறிய பொருள் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், நூற்றுக்கணக்கான கோடியில் நடைபெற்ற திட்டங்களில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்?

கேமரா விலை வித்தியாசம்
கேமரா விலை வித்தியாசம்

இதேபோல 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையாளர் பயன்பாட்டிற்காக ரூ.1.69 லட்சத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி வந்த ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பணியிட மாறுதலில் சென்றபோது, அதனைத் திரும்ப ஒப்படைக்கவில்லை.

இதனால் புதிய ஆணையாளர் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சத்தில் புதிய ஸ்மார்ட் போன் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஏற்புடையது அல்ல” எனக் குற்றம்சாட்டினார்.

செல்போன் வாங்கிய செலவு
செல்போன் வாங்கிய செலவு

‘புகார் குறித்து விசாரணை’

கேமரா விவகாரம் குறித்து மாநகராட்சி பி.ஆர்.ஓ. சையதிடம் விளக்கம் கேட்டோம். “நான் புதிதாக வந்துள்ளேன். கேமரா வாங்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து விசாரித்து சொல்கிறேன்” என்றார்.

செல்போன் விவகாரம் குறித்து முன்னாள் ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் விளக்கம் கேட்டோம். “நான் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்துவிட்டேன். அந்தப் போன் எங்கே இருக்கிறது என விசாரித்து சொல்கிறேன்” என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, “ஏற்கனவே இருந்த போன் நான்கைந்து ஆண்டுகள் பழையது. அதனால் அடிக்கடி ஹேங்க் ஆகி வந்ததால் பயன்படுத்துவதற்குச் சிரமமாக இருந்ததால், புதிய போன் வாங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் போன் வாங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் நிர்மல் குமார்

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை திமுக: "உன் மகனின் துரோகச் செயல்"- மோதிக்கொண்ட உதயம் சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் ( செப்டம்பர்- 5) நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், மேடையேறி மைக்கைப் பிடுங்கிப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகத்திற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் இடையே கார... மேலும் பார்க்க

`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' - 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட... மேலும் பார்க்க

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" - கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வ... மேலும் பார்க்க

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' - ஜே.சி.டி.பிரபாகர்

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்... மேலும் பார்க்க