செய்திகள் :

லின்இன் உறவுக்கு எதிர்ப்பு: பெற்றோர், சகோதரியை காதலனுடன் சேர்ந்து குத்திக் கொலைசெய்த இளம்பெண்!

post image

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர்கள் சோம்சுந்தர் மற்றும் அவர் மனைவி முத்துலட்சுமி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்த மகள் ஸ்வேதா பெற்றோரிடமிருந்து பிரிந்து கென்னத் என்பவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த உறவுக்கு சோம்சுந்தரும், அவர் மனைவியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு ஸ்வேதா சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கடன் குறித்து அவரது பெற்றோர் அடிக்கடி ஸ்வேதாவிடம் கேள்வி எழுப்பியதால், குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது.

ஸ்வேதா தனது லிவ் இன் பார்ட்னருடன் தனது பெற்றோரை பார்க்க வந்தார். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் இருந்தார். அவருடன் ஸ்வேதா வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் முத்துலட்சுமியை ​​அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

சித்திரிப்புப் படம்

இதில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டார். உடனே ஸ்வேதாவும், கென்னத்தும் சேர்ந்து ரத்தக்கரையை கழுவினர். சிறிது நேரத்தில் இளைய சகோதரி சுப்ரியா வந்தார். அவரையும் இருவரும் சேர்ந்து அடித்து மற்றும் குத்திக்கொலை செய்தனர்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் சோம்சுந்தர் வந்தார். அவரையும் இருவரும் சேர்ந்து தாக்கினர். உடனே சோம்சுந்தர் வீட்டிற்கு வெளியில் ஓடி வந்து உதவி கேட்டு கத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அவரும் இறந்து போனார். மூவரையும் கொலை செய்த ஸ்வேதாவும், கென்னத்தும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்றனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். இக்கொலையை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செய்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரண்மனையில் திருமண ஏற்பாடு; புனே கோட்டையில் மரணம் - இளம் தொழிலதிபர் வழக்கில் சிக்கிய மணமகள், காதலன்

புனேவின் புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை எனத் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி வழக்கில், ... மேலும் பார்க்க

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து நகை திருட்டு; கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். இவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழத்தார். இதனையடுத்து சௌரிபாளையம் மயானத்தில் நாகராஜன் உடலை, அவரது மகன் வெங்கடேஷ் அடக்கம் செய்தார். அப்போது தனது த... மேலும் பார்க்க

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த நீட் தேர்வுக்க... மேலும் பார்க்க

திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

கோவை சாய் பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயதில் வர்ஷினி என்ற மகளும் இருந்தனர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரித்து சென்ற நிலையில்... மேலும் பார்க்க

சிவகாசி: பிரசவத்தின்போது ஏட்டுவின் மனைவி சிசுவுடன் உயிரிழப்பு; போராட்டம் நடத்திய உறவினர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் ஊழியர் பாக்கியராஜ் ஆனந்தவள்ளி தம்பதியரின் மகள் ரேணுகா தேவி. இவரது கணவர் தினேஷ், தூத்துக்குடி மாவட்டம் செய்து... மேலும் பார்க்க

ஆபாசப் பட மோகம்; 9 மாதக் குழந்தையைக் கடத்திப் பாலியல் கொடுமைசெய்த 12 வயது சிறுவன் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகில் குலாரிஹா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 9 மாத மகளை தங்களது அருகில் படுக்க வைத்துவிட்டு உறங்கினர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தையைக் க... மேலும் பார்க்க