செய்திகள் :

லீடர்: ``வெற்றிமாறனும், தனுஷும் இந்தப் படத்தைப் பார்த்து.!" - நடிகர் லெஜண்ட் சரவணன் பெருமிதம்!

post image

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் லீடர். வரும் ஏப்ரல் 3-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் லெஜண்ட் சரவணன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரின் உரையில், ``உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனது இரண்டாவது படமான 'லீடர்', வருகிற ஏப்ரல் 3-ம் தேதி (புனித வெள்ளி) அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன்

ஒரு அப்பா மற்றும் மகள் பாசப் பிணைப்பிற்குள் ஒரு கேங்ஸ்டர் நுழையும்போது ஏற்படும் மாற்றங்களே இப்படத்தின் கதை. இயக்குநர் துரை செந்தில்குமார் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இப்படத்தைச் செதுக்கியுள்ளார். இப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அரை மணி நேரம் போனில் பாராட்டியது மறக்க முடியாதது. இப்படத்தின் பாடல்கள் கதையோடு பயணிக்கும் வகையில் மிகச்சிறப்பாக வந்துள்ளன.

ஜார்ஜியா ஏர்போர்ட்ட்டில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் மரத்துப் போகும் சூழலில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் குறுகலான ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், ஆயிரக்கணக்கான டெக்னிஷியன்கள் காத்திருப்பதால், ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடித்தேன். அந்த எனர்ஜி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. லால் சார் ஒரு ஜீனியஸ், அவருடன் நடித்தது சவாலாக இருந்தது. ஷயாம் தனது முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். இயக்குநர் செந்தில்குமார் மனதில் நினைத்தபடியே ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன்

ஐஸ்வர்யா லட்சுமியின் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்குப் பலம். விடிவி கணேஷ் காமெடியால் எங்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் பல டேக்குகள் சென்றன. இப்படத்தை அண்மையில் பார்த்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிரம்மாண்டமாக இருப்பதாகப் பாராட்டினர். ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் 'லீடர்' படமும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு வசனம், 'கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை நல்ல மனிதர்கள் மூலமாகவே செய்கிறார். அவர்களை நம்புங்கள், என்னையும் நம்புங்கள்'. இந்தச் கோடை விடுமுறையை 'லீடர்' படத்துடன் கொண்டாடுங்கள்" எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க