மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி: தமிழக அரசு
வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து தலைவர் கைது!
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கடந்த திங்களன்று (நவ. 26) அன்று வங்கதேசக் கொடியை அவமதிப்பு செய்ததாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டு அவரை சிறையிலடைக்க வங்கதேச நீதிமன்றம் கடந்த நவ. 27 அன்று உத்தரவிட்டது, இதனால் ஆத்திரமுற்ற அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மேலும் ஒரு இஸ்கான் துறவியான ஷ்யாம் தாஸ் பிரபு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயி கிருஷ்ண தாஸின் உதவியாளரான ஷ்யாம் தாஸ் பிரபு, அவரைச் சிறையில் சந்திக்கச் சென்றபோது வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை, கொல்கத்தாவிலுள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவரான ராதாராமன் தாஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ”பிரம்மசாரி ஷ்யாம் தாஸ் பிரபு இன்று சட்டோகிராம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் பார்ப்பதற்கு பயங்கரவாதியைப் போன்று உள்ளதா? வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துத் துறவிகள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து | வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது: முன்னாள் பிரதமா் ஹசீனா கண்டனம்
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் மோசமான நிலைமைக்கு காரணமாகவும், அமைதியான வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), இந்திய அரசு இந்தப் பிரச்னையைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
வங்கதேச மக்கள் தொகையில் சுமார் 8% ஆக இருக்கும் ஹிந்து சிறுபான்மையினர் அங்கு அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.