செய்திகள் :

`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்

post image

வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், 'இந்த முறையும் உங்களுக்கே சீட்... நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க...' என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம்.

அண்ணா அறிவாலயம்

இதனால், சீட் எதிர்பார்ப்பில் இருக்கும் இதர நிர்வாகிகள் மத்தியில் கடும் கொதிப்பு உருவாகியிருக்கிறது. ''எங்கள் கட்சியில் யாருக்கு சீட் என்பதை, எங்கள் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். அறிவாலய அமைச்சர்கள் எப்படி முடிவு செய்யலாம்... இதை ஆரம்பத்திலேயே தலைவர் கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், 'மாண்புமிகுக்கள் பார்த்து ஓகே சொல்லும் நபருக்குத்தான் தலைவர் சீட் கொடுக்கிறார்' என்ற பெயர் உருவாகிவிடும்...'' என்று உறுமுகிறார்கள்.

ஏற்கெனவே, கதர்க் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மீது, 'ஆளும் கட்சிக்கு அதிகமாக ஜால்ரா போடுகிறார்; கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்...' என்று தொடங்கி, பி.எஸ்.பி கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வரை, ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குத் பறந்துகொண்டே தான் இருந்தன. இந்தச் சூழலில், புது புகாரும் புகையைக் கிளப்புகிறதாம்.

சமீபத்தில் 'திருச்சிக்காரர்' தரப்பு தலைநகரில் நடத்திய பொங்கல் விழாவில், தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் ஆதரவாளர்கள் செய்த அடாவடியை யாரும் ரசிக்கவில்லையாம். தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளரானவர் வழியாக டெல்லிக்கு, சில வீடியோ ஆதாரங்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். 'இதேநிலை தொடர்ந்தால் கட்சி கரைசேராது...' என்று சுமார் 20 மாவட்டத் தலைவர்கள் கோரஸ் பாடியிருக்கிறார்கள். இவ்விவகாரம் சீரியஸாகியுள்ள நிலையில், 'கதர் கட்சியின் மாநிலத் தலைவர் மாற்றப்பட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றன பவன் வட்டாரங்கள்.

நெருப்புத் துறையின் உச்ச அதிகாரியாக இருப்பவர், தனக்குக் கீழ் பணிபுரியும் 'பெருமாள்' பெயர் கொண்ட அதிகாரியைக் கண்மூடித்தனமாக நம்புகிறாராம். அதை லாகவமாகப் பயன்படுத்திக்கொண்டு, உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி, லைசென்ஸ் வழங்கும் விவகாரத்தில் பல 'லட்டுகளை' வாங்கிக் குவிக்கிறாராம் 'பெருமாள்' அதிகாரி. அவருடைய வசூல் வேட்டை தெரியாமல், நீட்டிய இடத்திலெல்லாம் உச்ச அதிகாரி கையெழுத்துப் போடுவதால், 'ரிட்டயர்டு ஆகப்போகும் கடைசி நேரத்தில் ஏதாவது சிக்கலில் சிக்கிக் கொள்ளப் போகிறார்...' என்று 'உச்' கொட்டுகிறார்கள் நெருப்பு துறையில் பணிபுரிபவர்கள்.

வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கியிருக்கின்றன. பந்தக்கால் நடும் நிகழ்வுக்கு, பா.ஜ.க-வினரை அழைக்காமல் அ.தி.மு.க-வினரே தன்னிச்சையாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருப்பதுதான் கூட்டணிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. '

மோடி, எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில், கூட்டணிக்குத் தலைமை அ.தி.மு.க-தான் என்றாலும், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காமல் எப்படி பந்தக்கால் ஊன்றலாம்... டெல்லியில், பிரதமருடன் பொங்கல் விழாவில் நயினார் நாகேந்திரன் இருக்கும் நேரமாகப் பார்த்து, கமுக்கமாக பந்தக்காலை ஊன்றிவிட்டார்கள் அ.தி.மு.க-வினர்' என்று பொருமுகிறது கமலாலய வட்டாரம். நயினாரை வைத்து மீண்டும் ஒரு பந்தக்கால் ஊன்றுவதற்கு திட்டமிடப்பட்டதாம். தேவையற்ற சர்ச்சைகள் எழும் என்பதால், அந்தத் திட்டத்திற்கு தடைபோட்டுவிட்டதாம் டெல்லி.

சமீபத்தில், கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஆன்மிக மடத்தின் நிர்வாகிகளை, மலர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள். தேர்தலையொட்டி பெரும் 'உதவிகள்' பேசப்பட, 'ஆட்சி மாறினால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் உதவிக்கு சம்மதித்திருக்கிறதாம் அந்த மடம். இதில் பஞ்சாயத்தே, மடத்தின் உதவிகளைக் யார் கையாள்வது என்பதில்தான் வெடித்திருக்கிறது.

மத்திய சென்னையிலுள்ள மலர்க்கட்சியின் முக்கியப் புள்ளி, 'நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று கையைத் தூக்குகிறாராம். அவர் முன்னாள் ஆளுநரின் ஆள் என்பதால், பொறுப்பை ஒப்படைக்கத் தயங்குகிறாராம் மலர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். 'இந்த உதவிகளை கையாண்டாலே போதும், பெரியளவில் பலனடைந்துவிடலாம்' என்று கணக்குப் போட்டு, டெல்லி மக்கள் பிரதிநிதி மற்றும் முன்னாள் 'பெல்' மாஜியின் ரூட்டில் சிபாரிசுக்காக முட்டிமோதுகிறாராம் அந்த முக்கியப் புள்ளி.

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்த... மேலும் பார்க்க

10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப... மேலும் பார்க்க

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க