'6 சீட்டுக்கு மேல கேக்காதீங்க!' முடிவைச் சொல்லிய திமுக - ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் ...
வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன?
ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆனால், அதுவும் கொஞ்சம் தனி ஸ்டைலில்.
பிற நாடுகளின் தேர்தல்களில் தலைவர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. ஆனால், வட கொரியாவில் 'இவர்' தான் தலைவர் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தல் நடக்கிறது அல்லது நடத்தப்படுகிறது. அவ்வளவு தான்.
வட கொரியாவின் நாடாளுமன்றத்தின் பெயர் 'சுப்ரீம் மக்கள் சட்டமன்றம்'. இந்தச் மன்றத்திற்கான 15-வது தேர்தல் கடந்த 15-ம் தேதி நடைபெற்றுள்ளது.

வாக்குகள்: வெற்றியும், தோல்வியும்!
அந்தத் தேர்தலில் இப்போது வட கொரியாவின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னே மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் 99.93 சதவிகித வாக்குகளில்.
மீதம் உள்ள வாக்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வெளிநாடு சென்றதாலும், கடலில் பணி செய்துகொண்டிருந்ததாலும் வாக்களிக்கவில்லை. இன்னும் சில சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றன.
மேலும், 99.93 சதவிகித வாக்குகள் கிம் ஜாங் உன் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவளித்து வாக்களிக்கப்பட்டுள்ளது. மீதம் பதிவாகி உள்ள வாக்குகளில் 0.07 சதவிகிதம் எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது.
0.07 சதவிகிதம் எதிரான வாக்குகள் என்பது வட கொரியாவைப் பொறுத்தவரை மிக மிக அதிசயமானது. காரணம், தேர்தலில் வாக்களித்த அனைவரும் கிம் ஜாங் உன்னிற்கே வாக்களிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் எழுதப்படாத சட்டம்.
'ஒரே' வேட்பாளர் தான்
இந்தத் தேர்தலில் சுப்ரீம் மக்கள் சட்டமன்றத்திற்கு 687 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால் 687 தொகுதிகள் அல்லது பகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது.
ஆனால், இதில் என்ன ஹைலைட் என்றால், 687 தொகுதிகள் அல்லது பகுதிகளிலும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கிறார். மக்கள் அவரை தவிர யாருக்குமே வாக்களிக்க முடியாது.
இப்படியிருக்கையில், வட கொரியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1957-ம் ஆண்டு முதல் இதுவே 0.07 சதவிகித எதிர்ப்பு வாக்குகள் பதிவாகி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 15 ஆண்டுகளுக்கு வட கொரியாவின் அதிபராக இருந்த கிம் ஜாங் உன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர உள்ளார்.
வாழ்த்துக்கள் கிம் ஜாங் உன்!



.jpeg)











