செய்திகள் :

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் மோப்ப நாய்கள் - மாயமானவர்களை தேடும் பணிகள் 2- வது நாளாக தீவிரம்

post image

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கித் தவித்த 9 நபர்களை உள்ளூர் மக்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் உயிருடன் மீட்கப்பட்டு மேப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில், 6 பேரை காணவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. காணாமல் போனவர்களை மோப்ப நாய்களின் உதவியுடன் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

மீட்பு குழுவினர் 4 மண்டலங்களாகப் பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு மீட்பு பணிகள்

மீட்பு நடவடிக்கைகள் குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகம், " அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் வசித்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை மற்றும் சேறும் சகதியுமான சூழல் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கொண்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களால் 2 - வது நாளாக களத்தில் உள்ளனர். உள்ளூர் அரசு பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.

மும்பை கனமழை: "நாளை போய்விடலாம்னு சொன்னேன்; ஆனா..."- கட்டிடம் இடிந்ததில் குடும்பத்தை இழந்த நபர்

மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக மான்கூர்டு பகுதியில் மன்குர்த் ஜனதா நகரில் இருந்த சட்டவிரோத நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 38... மேலும் பார்க்க

"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவு பற்றி வி.டி.சதீசன்

கேரள மாநிலம், ​வயநாடு கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் பத்துக... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை; மாயமானவர்களை மண்ணுக்குள் தேடும் மீட்புக் குழுவினர்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லாடி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் சிக்கியுள்ளனர். போக்குவரத்திற்காக இரட்டை சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் மழை... மேலும் பார்க்க

ஆங்காங்கே நிலச்சரிவு... சாலைகளை மூழ்கடித்த வெள்ளம் - மகாராஷ்டிராவை திணறடிக்கும் கனமழை!

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகப் போக்குவரத்து, ரயில் சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

மும்பையைப் புரட்டிப்போட்ட கனமழை: நான்கு மாடிக் கட்டடம் இடிந்து 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

மும்பையின் மான்கூர்டு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் நான்கு மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில், 5 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் நான்கு பேர் ஒரே குடும... மேலும் பார்க்க