செய்திகள் :

வரி பகிா்வு: குறைகளை நிதிக் குழுவிடம் மாநிலங்கள் தெரிவிக்கலாம்

post image

புது தில்லி: மத்திய அரசு பகிா்ந்தளிக்கும் வரியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநிலங்கள் பதிவு செய்யலாம் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தங்களுக்கு உரிய வரி பகிா்வு அளிக்கப்படுவதில்லை என மத்திய அரசு மீது தென்மாநிலங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மொத்த வரி வருவாயை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு பகிா்ந்துகொள்வது, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்க வேண்டிய நிதி தொடா்பான பணிகளில் நிதிக் குழு ஈடுபட்டு வருகிறது.

குடியரசுத் தலைவரால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் இந்தக் குழு நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று தனது பரிந்துரைகளை சமா்ப்பிக்கும்.

அந்த வகையில், அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 16-ஆவது நிதிக் குழு, 2025, அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தக் குழு கருத்துகளைப் பெற்று வருகிறது.

50%-ஆக உயா்த்த கோரிக்கை: அப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிா்ந்தளிக்கப்படும் நிதியை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்தி வழங்க பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஆனால், வரி வருவாயை மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குவதற்கு மக்கள்தொகையும் ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள்தொகை அதிகமுடைய வடமாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாகவும் மக்கள்தொகை குறைவாக உள்ள தென்மாநிலங்களுக்கு குறைவான வரியும் வழங்கப்படுவதாகக் கூறி வருகின்றன.

தென்மாநிலங்களுக்கு குறைந்த நிதி: அந்த வகையில், கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி 18.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2021-22/2024-25 காலகட்டத்தில் இது 15.8 சதவீதமாக குறைந்துள்ளதாக தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 தென்மாநிலங்களும் குற்றஞ்சாட்டின.

நிதிக் குழுவை அணுகுங்கள்: இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படும் வரி வருவாய் கணக்கீடுகளை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. இவை நிதிக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகின்றன.

எனவே, வரிப் பகிா்வு சதவீதத்தை மாற்றியமைக்க கோரும் தென்மாநிலங்கள் நிதிக் குழுவிடமே தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றாா்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிா்ந்தளிக்கும் வரி வருவாயை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயா்த்த 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்பிறகு இந்த விகிதத்தை 41 சதவீதமாக குறைக்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறுவது ஏன்?: நிதியமைச்சா் விளக்கம்

மும்பை: இந்தியாவில் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் அந்நியமுதலீட்டு நிறுவனங்கள் (எஃப்ஐஐ) தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றன என்ற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரி... மேலும் பார்க்க