செய்திகள் :

"வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை"- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது!

post image

கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. எர்ணாகுளத்தின் சளிக்கம்வட்டம் பகுதியில் பிறந்த ஸீனா-வுக்கு ஒரு வயது இருந்தபோதே தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் சென்றார். தாய் கார்த்தியாயினி கூலி வேலை செய்துதான் ஸீனாவையும் அவரது உடன்பிறப்புகளையும் காப்பாற்றி வந்தார். ​ஸீனா எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது மூன்று சகோதரர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஸீனாவுக்குத் துணையாக அக்கா தீனா மட்டுமே எஞ்சியிருந்தார்.

​பசியும் தனிமையும் மட்டுமே அன்றாட வாழ்க்கையாக இருந்தது.

​பள்ளியில் நண்பர்கள் மதிய உணவு சாப்பிடும்போது, தன்னிடம் உணவு இல்லாததால் ஸீனா ஒரு ஓரமாக அமர்ந்து அழுவதுண்டு. ​பின்னர், அஜிதா நாராயணன் என்ற உறவினர் இந்த இரண்டு பேரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்து வளர்த்தார்.

கேரள பாடப் புத்தகத்தில் ஸீனா வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது.

தாய் வேலைக்குச் செல்லும் நேரங்களில் அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் பந்து விளையாடி வந்த ஸீனா, தனது 11-வது வயதில் தீவிரமாக கால்பந்து மைதானத்தில் இறங்கினார். ​பள்ளி அணிகள் மற்றும் உள்ளூர் கிளப்களில் விளையாடி மாவட்ட அணிக்குள் நுழைந்தார். ​கால்பந்தே தனது வாழ்க்கை என முடிவு செய்து, திருமண வாழ்க்கையைத் தவிர்த்து விளையாட்டிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். ​கேரள மாநில அணிக்காக மட்டுமன்றி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்காகவும் களமிறங்கினார்.

​களத்தில் ‘மிட்பீல்டர்’ பொறுப்பில் அபாரமாகச் செயல்பட்டு தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்தார். 2016-ல் தனது ஆட்டக்களப் பயணத்தை நிறைவு செய்த ஸீனா, சிறந்த பயிற்சியாளராக உருவெடுத்தார். கேரள கால்பந்து சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளரான இவர், மரடு பகுதியில் 'ஸீனாஸ் ஃபுட்பால் அகாடமி' நடத்தி வருகிறார். மேலும் திருப்பூணித்துறா ஸ்ரீநாராயணா பப்ளிக் பள்ளியின் கால்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 2000-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

சி.வி.ஸீனா

வாழ்க்கை தொடர்ச்சியான இழப்புகளையும் வறுமையையும் பரிசளித்தபோதும், கால்பந்து என்ற ஒற்றை நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சர்வதேச வீராங்கனையாகவும் புகழ்பெற்ற பயிற்சியாளராகவும் உயர்ந்த ஸீனாவின் வாழ்க்கை வரலாறு கேரள மாநிலத்தில் 11-ம் வகுப்பு மலையாள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஸீனா கூறுகையில்,"நான் ஜீரோவில் இருந்துதான் ஹீரோவாக மாறினேன். கடுமையான துயரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளேன்" என்றார்.

'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?

லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த 'Michelin Le Mans Cup' கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொட... மேலும் பார்க்க

தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?

சமூக வலைதளங்களில் ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை சாதனைகளைப் படைக்கும்போது, அந்த வெற்றிகள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகின்றன என்பது பல நேரங்களில் அவர்களின் திறமையை மையப்படுத்தியதாக மட்டும் இருப்பதில்லை... மேலும் பார்க்க

“ஒரு கேட்ச்... ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!

கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூ... மேலும் பார்க்க

`நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் ரேஸ்' - முதல்வர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறார்?

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன... மேலும் பார்க்க

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்... “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியா... மேலும் பார்க்க

Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர்

தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக... மேலும் பார்க்க