செய்திகள் :

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று காலை சென்றபோது, துர்நாற்றம் வீசியதால் கிணற்றின் அருகில் சென்று எட்டிப் பார்த்திருக்கிறார். அப்போது, 2 சடலங்கள் அழுகிய நிலையில் மிதந்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். தகவலறிந்ததும், கிராம மக்கள் பெரும்பாலானோர் அங்கு திரண்டு கிணற்றைச் சுற்றிலும் கூடினர். உடனடியாக ஆலங்காயம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்களுடன் போலீஸார் விரைந்து சென்று கிணற்றில் மிதந்துக் கொண்டிருந்த 2 சடலங்களையும் மீட்டு மேலே கொண்டுவந்தனர்.

சிறுவர்களின் பிணம்

சடலங்களின் உடலமைப்பை பார்க்கும்போது, 15 வயது மற்றும் 9 வயதே ஆன சிறுவர்களின் உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற எந்தவொரு விபரமும் உடனடியாக தெரியவரவில்லை. வாணியம்பாடி டி.எஸ்.பி மகாலட்சுமியும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், அருகிலுள்ள மாணவர் விடுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் புறங்களில் இருந்து சிறுவர்கள் யாரேனும் மாயமாகியுள்ளனரா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மீட்கப்பட்ட சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி, கிராமத்தையே அலறவிட்டிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க