செய்திகள் :

வாலாஜாபேட்டை: தாசில்தார் காருக்கு தீ வைப்பு; நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது

post image

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாசில்தார் அலுவலகத்தின் போர்டிகோ வாயிலில் நிறுத்திவைக்கப்பட்ட தாசில்தார் பயன்படுத்தும் `அரசு வாகனம்’ நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீ மளமளவெனப் பரவிய பிறகே, தாசில்தார் அலுவலகத்தின் இரவுநேரக் காவலர் பார்த்திருக்கிறார். தீயை அணைக்க முடியாததால், உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிக் காத்திருந்தது.

தாசில்தார் காருக்கு தீ வைத்த இளைஞன்
தாசில்தார் காருக்கு தீ வைத்த இளைஞன்

கார் தானாகத் தீப்பற்றி எரியவில்லை. இளைஞன் ஒருவன் முகத்தை மறைத்தபடி, காரைக் கொளுத்திவிட்டு தப்பி ஓடியிருப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளைக்கொண்டு, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில், காருக்குத் தீ வைத்த இளைஞனை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர். அந்த இளைஞன் யார், என்னக் காரணத்துக்காக தாசில்தாரின் காருக்குத் தீ வைத்தான் என போலீஸார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க