செய்திகள் :

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்!

post image

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``முதல்வர் கரூர் செல்லவிருப்பதாக எழுந்த செய்திகள் வெளியாகின்றன. முதலமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில், இந்த எதிர்பார்ப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் உள்ளது. வி.சி.க கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியைக் கேட்க முயற்சிப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை. நான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இது தொடர்பாக த.வெ.க தலைமைக்கு விசிக எந்தவித அழுத்தத்தையும் தரவில்லை. எந்த இலாகாவையும் மாற்றித் தருமாறும் கோரவில்லை. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் திடீர் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. இது குதிரை பேரமா என்றால், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் என்னால் கருத்து கூற முடியாது. அதேநேரம், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறோம்.

முதலமைச்சர் வழங்கும் தேநீர் விருந்துக்கு அமைச்சர்கள் என்னை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்துள்ளனர். ஆதரவு அளிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தேநீர் விருந்து போல ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்றுப் பேசவிருக்கிறார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகே என்ன விவாதிக்கப்பட்டது என்பது முழுமையாகத் தெரியவரும்." என்றார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க