``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?" - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசு...
விதவிதமான இட்லி ரெசிப்பி: `சிறுதானிய இட்லி' செய்வது எப்படி?
சிறுதானிய இட்லி
தேவையானவை:
இட்லி அரிசி - ஒரு கப்
சாமை - ஒரு கப்
திணை - ஒரு கப்
வரகு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - முக்கால் கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
இட்லி அரிசி, சாமை, திணை, வரகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் தனியாக ஊற வைக்கவும். பின்பு இட்லி மாவுக்கு அரைப்பது போல் அரிசி,சாமை,திணை,வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து உப்புப் போட்டுக் கலக்கி எட்டு மணி நேரம் கழித்து இட்லிகளாக ஊற்றவும்.
கன்னட மக்கள் பயன்படுத்திய `இல்லாலிகே’ என்ற உணவுதான் ‘இட்லி’ என்று சொல்வோர் உண்டு.













