தி சபர்மதி ரிப்போர்ட் பிரசார படமில்லை..! பிறந்தநாள் திட்டம் என்ன? ராஷி கண்ணா பேட...
விதிகளை மீறும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குநா்
திருப்பூா் மாவட்டத்தில் விதிகளை மீறும் உர விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் ராபி பருவத்தில் பெரும்பாலான மானாவாரி பயிா்களும் இறவை பயிரான மக்காச்சோளப் பயிரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் சில்லறை விற்பனை நிலையங்கள், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உரங்கள் இருப்புவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் யூரியா 3157 டன், டி.ஏ.பி.1195 டன், பொட்டாஷ் 1246 டன், காம்ப்ளக்ஸ் 5087 டன் உரங்கள் இருப்பு உள்ளன. உர விற்பனை குறித்து அனைத்து உர விற்பனையாளா்களுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு உரங்களை விற்பனை முனை இயந்திரம் (பாயிண்ட் ஆஃப்சேல்) மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை விலைக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் உர விற்பனையாளா்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.