BB TAMIL 9 DAY 87: விக்ரம் - திவ்யா மோதல்; மீண்டும் பாரு - கம்மு ரொமான்ஸ் - 87வத...
Dharmendra: "இது கோடிக்கணக்கான மக்களுக்கு தர்மேந்திரா விட்டுச் சென்ற பொக்கிஷம்!" - அமிதாப் பச்சன்
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா கடந்தாண்டு இயற்கை எய்தினார்.
இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்திருந்த 'இக்கிஸ்' திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கிறது.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்தின் ரிலீஸை ஒட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் அமிதாப் பச்சன் 'க்ரோர்பதி' நிகழ்ச்சியில் தர்மேந்திராவை நினைவு கூர்ந்தார்.
அதைத் தொடர்ந்து அவருடனான நினைவுகள் குறித்தும், 'ஷோலே' படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விஷயங்கள் குறித்தும் அந்த நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.
அமிதாப் பச்சன், " 'இக்கிஸ்' திரைப்படம் நமக்கு கிடைத்த கடைசி நினைவுச் சின்னம். கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் விட்டுச் சென்ற பொக்கிஷம்.
ஒரு கலைஞன் தன் உயிரின் கடைசி மூச்சு வரை கலையைத் தொடர விரும்புவான். அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார்.
அவர் சாதாரண மனிதர் மட்டுமல்ல. அவர் ஒரு உணர்வு!" என்றவர், "நாங்கள் பெங்களூரில் 'ஷோலே' படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தோம்.

அப்போது அவர் மல்யுத்த வீரரைப் போன்ற ஒரு ஹீரோவாக இருந்தார். அப்படத்தின் என்னுடைய கதாபாத்திரத்தின் இறப்புக் காட்சியில் நீங்கள் என்னிடத்தில் பார்த்த நடிப்பைக் கொண்டு வர அவர் உதவினார்.
ஏனெனில் அந்தக் காட்சியில் அவர் என்னை அவ்வளவு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அந்தக் காட்சி கோரும் எமோஷனை இயல்பான நடிப்பின் மூலம் அவர் வெளிப்படுத்தினார்." எனக் கூறியிருக்கிறார்.




















