செய்திகள் :

விருதுநகர்: அறுவடை காலத்தில் தொடரும் அவதி; அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

post image

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.

சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இன்னும் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அறுவடைக்குத் தயாரான நெல்
அறுவடைக்குத் தயாரான நெல்

நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காததால், தனியாருக்குக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை அறுவடை காலத்திலும் தாங்கள் இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், முன்கூட்டியே அதிகாரிகள் அரசு கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடைக்குத் தயாரான நெல்
அறுவடைக்குத் தயாரான நெல்

மேலும், வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு அறுவடை காலத்திலும் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுவதால், நிரந்தரத் தீர்வாக கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அரசு விரைவில் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் வாழை, மஞ்சள் சாகுபடி; ரகங்கள் தேர்வு, கருவிகள் பயன்பாடு; மாபெரும் கருத்தரங்கு

பசுமை விகடன் நடத்தும் சார்பில் 'வாழை + மஞ்சள் சாகுபடி, லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்' என்ற தலைப்பில் ஈரோடு அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.21‑12‑20... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ப.மோகனப் பிரியா,உடுமலைப்பேட்டை,திருப்பூர்.90034 22422பூங்கார் சத்து மாவு, ரத்தசாலி சத்து மாவு, மணிச்சம்பா உப்மா, புட்டு மாவு வகைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இய... மேலும் பார்க்க

இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குரசாயனங்களை அதிக வி... மேலும் பார்க்க

Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல ... மேலும் பார்க்க

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்... மேலும் பார்க்க