செய்திகள் :

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு

post image

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனார்பட்டியில், முத்து மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இன்று, அந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்பின்போது திடீரென விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விபத்தின்போது, இந்தப் பட்டாசு ஆலையிலிருந்து வெடிமருந்துகள் பயங்கர ஒலியுடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

10 கி.மீ தூரம் வரை இந்த வெடிப்பின் அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் என அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மேலும், இந்தப் பட்டாசு ஆலையில் இருக்கும் அறைகள் அத்தனையும் விபத்தில் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்த விபத்து குறித்துப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

வால்பாறை: சுற்றுலா வேன் கவிழ்ந்து கொடூர விபத்து – 7 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வால்பாறை செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து வால்பாறைக்கு 16 பே... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடிப்பு: 10 பேர் பலி?; 40 பேர் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ளது வேதாந்தா மின் உற்பத்தி நிலையம் (Vedanta Power Plant), இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர பாய்லர் ... மேலும் பார்க்க

மண்டபம் அருகே டூ வீலர்கள் மோதல்; காய்ச்சல் சிகிச்சைக்குச் சென்ற சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவரின் மகள் நபியாஶ்ரீ (6). நபியாஶ்ரீக்கு காய்சல் அடித்ததால் மருத்துவரிடம் சிகிச்சை பெற தன் தம்பி கபில்தேவ் முருகன் (17) உடன் மூவரும் டூவீலரில... மேலும் பார்க்க

டாக்சி மீது டேங்கர் மோதி ஒரே பெரும் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 11 பேர் பலி

மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருந்து முர்பாட் என்ற இடத்திற்கு டாக்சி சேவை இயக்கப்படுகிறது. இந்த வழிதடத்தில் பஸ் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் ஷேர் டாக்சி அதிக அளவில் இயக்கப்படுகிறது. நேற... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கி... மேலும் பார்க்க

ஐதராபாத்: காங்கிரீட் கலவை டேங்கர் விழுந்து விபத்து; BMW காரில் சிக்கி வழக்கறிஞர் பலி

ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ராவ் தனது பி.எம்.டபிள்யூ காரில் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சிகச்சேர்லா என்ற இடத்தில் இருக்கும் டோல்கேட் அருகில்... மேலும் பார்க்க