செய்திகள் :

Mohanlal: "நாளை நானும் மறைந்துவிடுவேன்; அதுதான் யதார்த்தம்!" - மோகன்லால் உருக்கம்

post image

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், மலையாளத்தில் வெளிவரும் 'கிருஹலட்சுமி' இதழுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

Mammootty - Mohanlal
Mammootty - Mohanlal

அந்தப் பேட்டியில் தன்னுடன் பணியாற்றி மறைந்த சக கலைஞர்களின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி மோகன்லால் பகிர்ந்திருக்கிறார்.

"என்னுடைய பழைய படங்களின் சில காட்சிகளைப் பார்க்கும்போது என் மனம் சோகத்தில் மூழ்கிவிடும். அதற்குக் காரணம், அந்த பிரேம்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான்.

அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது. ஆனால் துக்கப்படுவதால் என்ன பயன்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம்.

இந்த உண்மையை முழுமையாகத் தெரிந்தே நான் இப்போதும் வருந்துகிறேன். கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களைக் கண்டுவிட்டது.

Mohanlal with his mom
Mohanlal with his mom

ஆனாலும் மனிதன் இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறான். நானும் ஒரு சாதாரண மனிதன்தானே! என் தாய், தந்தையர், சகோதரர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள் என்பது எனக்குப் பெரும் துயரத்தைத் தருகிறது.

ஆனாலும், நான் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை. கண்களை மூடினால் அவர்கள் எனக்குள்ளேயே இருக்கிறார்கள். என்னால் அவர்களைத் தொடவோ பார்க்கவோ முடியாது, அவ்வளவுதான்" என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

புதுமுகங்களை வைத்து வசூலை அள்ளிய வாழ 2; உடனடியாக அறிவிக்கப்பட்ட 'வாழ 3' - நெகிழும் இயக்குநர்

மல்லுவுட்டில், 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே', 'குருவாயூர் அம்பலநடையில்' போன்ற திரைப்படங்களை இயக்கி அனைத்துப் பக்கமும் அறியப்பட்டவர் இயக்குநர் விபின் தாஸ். 'குருவாயூர் அம்பலநடையில்' திரைப்படத்திற்குப் பிறகு இவர... மேலும் பார்க்க

"பேசில் ஜோசப்பிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்" - டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருக்கும் ‘பள்ளிச்சட்டாம்பி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பள்ளிச்சட்டம்பிஇப்படத்தின் ரிலீஸையொட்டி பல்வேறு இடங்களிலும் படக்கு... மேலும் பார்க்க

மேஜர் ரவி முதல் அஞ்சலி நாயர் வரை! - கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கும் திரைப்பிரபலங்கள்

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி வரையிலான நிலவரப்படி, 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர்கள் பலரும் புதிதாக அரசி... மேலும் பார்க்க

Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" - மம்மூட்டி

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை 'சீ யூ சூன்', 'மாலிக்' போன்ற திரைப்படங்களை இய... மேலும் பார்க்க

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன்... மேலும் பார்க்க