SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும்...
விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக்க தானமளித்த நீதிபதி
விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.
நான் பிறந்த மண்ணுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. நீதியரசர் ராமகிருஷ்ணன், ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது திருச்சுழியில் ரமணர் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மரத்தடியில் படித்த பள்ளி மாணவர்களுக்கு உதவினர். அதேபோல மண்ணின் மைந்தன் என்று பெயரில் என்னையும் அழைத்து இருந்தனர். நான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன். ஆட்சியர் சுகபுத்ரா உதவியுடன் 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க திருத்தங்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையொப்பமிட்டு புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளேன்.

எனது 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க வழங்கிய எனக்கு இந்த மண் அங்கீகாரம் செய்து மேடையேற்றி உள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு மற்றும் கீழடி தொடர்பான அத்தனை விஷயங்களுக்கும் என்னுடைய பங்களிப்பும், நீதியரசர் கிருபாகரன் பங்களிப்பும் உண்டு.
கீழடி அகழ்வாய்வு பற்றி தெரிந்து கொள்ள கார்பன் டேட்டிங் கதிரியக்கச் சிதைவை அளவிடுவதன் மூலம் கரிமப் பொருட்களின் வயதைக் கண்டறியும் முறைக்கு முதன் முதலில் அனுப்பி வைத்தோம். அதன் பிறகுதான் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பாகவே முந்தைய கலாசாரம் நாகரிகம் கீழடி என்பது எனத் தெரியவந்தது.
அதேபோல் வெம்பக்கோட்டை அகழ்வாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்றதில்லை. அது சம்பந்தமான வழக்குகளுக்கும் உத்தரவு போட்டுள்ளேன். வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. நம் முன்னோர்கள் இவ்வளவு திறமையுள்ள மாவட்ட மக்கள் பட்டாசு தொழிலோடு முடங்கிப் போய் உள்ளது வேதனையாக இருக்கிறது.

பட்டாசு தொழிலை மட்டும் நம்பியிருக்காமல் வேறு தொழில்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். வேறு முதலீடுகளையும் கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கின்ற பெண்களின் கைகள் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஒட்டி காப்பு காய்த்து போயிருக்கிறது.
இது இல்லை என்றால் கருவேலம் மரத்தை வெட்டுகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். இதனை ஒரு தனி ஆளாக மாற்ற முடியாது. இது ஒரு இயக்கமாக உருவாக வேண்டும். இங்கு இருக்கிற இளைஞர்கள் முன்னெடுத்து கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தையும் உயர்த்துவோம் மக்களின் தரத்தையும் உயர்த்துவோம்” எனத் தெரிவித்தார்.















