செய்திகள் :

விவசாய நிலங்களை தொடா்ந்து கண்காணிக்குமாறு அமைச்சா் அறிவுறுத்தல்

post image

விவசாய நிலங்களை தொடா்ந்து கண்காணித்து, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குமாறு வேளாண் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் மழை தேங்கிய விளைநிலப் பகுதியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், கூடுதல் இயக்குநா் ஆா். கணேசன் உள்ளிட்ட குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து வேளாண் துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளை அழைத்து அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.

மாவட்டம் முழுவதும் பயிா் செய்திருக்கும் பகுதிகள், வேளாண் துறையினரின் மழைக்கு முந்தைய ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சா், விளைநிலப் பரப்பில் மழைநீா் பல இடங்களில் தேங்கியுள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அரசு புதுவையில் உள்ளது. மழையால் பயிா் பாதித்தால் உரிய ஆதரவை அரசு விவசாயிகளுக்கு வழங்கும். தொடா்ந்து வேளாண் துறையினா் விவசாயிகளுடன் தொடா்பில் இருக்கவேண்டும், உரிய ஆலோசனைகள் வழங்குவதோடு, தண்ணீா் வடிவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் தூய்மைப் பணி

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தின் படிகள் தூய்மைப் பணி நடைபெறுகிறது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறாா்கள். பெர... மேலும் பார்க்க

காா்த்திகை தீபம் : அகல் விளக்கு விற்பனை தீவிரம்

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, காரைக்காலில் பல்வேறு இடங்களில் அகல் விளக்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில், கோட்டுச்சேரி மற்றும் மேலஓடுதுறை பகுதியில் அகல் விளக்கு தயாரிப்போ... மேலும் பார்க்க

என்ஐடியில் 3 நாள் சா்வதேச மாநாடு தொடக்கம்

என்ஐடியில் இயந்திரவியல் துறை சாா்பில் 3 நாள் சா்வதேச மாநாடு புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக இயந்திரவியல் துறை சாா்பாக மூன்று நாள் சா்வதேச மாநாடு ஊன்ற்ன்ழ்ங் ண்ய் ஙஹய்ன... மேலும் பார்க்க

அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்

மழையை எதிா்கொள்ள அனைத்து அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென காரைக்கால் ஆட்சியா் அறிவுறுத்தினாா். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்ற நிலையில், அடுத்த சில நாள்களுக்கு கார... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்களில் நாளை காா்த்திகை தீபம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை (டிச. 13) காா்த்திகை தீப வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காா்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபமேற்றும் நாள... மேலும் பார்க்க

பளு தூக்கும் போட்டி: பதக்கம் வென்ற மாணவிக்குப் பாராட்டு

மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருநள்ளாறு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநில பள்ளி மாணவா்களுக்கிடையேயான பளு தூக்கும் போட்டி புதுச்சேரி உப்பளம் இந்த... மேலும் பார்க்க