செய்திகள் :

``விவாகத்துக்குப் பின் மதுவுக்கு அடிமையானேன்" - கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்வு!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளருமான யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், தான் சந்தித்த மதுப்பழக்க அடிமைத்தனம் மற்றும் அதிலிருந்து மீண்டு வர மறுவாழ்வு மையத்தில் (Rehab) சேர்ந்து சிகிச்சை பெற்றது குறித்து, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், ``கடந்த ஆண்டு கவுண்டி கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, எனது மதுப்பழக்கம் எல்லை மீறிப்போனது. நிலைமை கைமீறிச் சென்றதால், நானாகவே சென்று ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தேன்.

யுஸ்வேந்திர சாஹல்
யுஸ்வேந்திர சாஹல்

அங்கு 26 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றேன். அந்த முடிவு என் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. தற்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முதிர்ச்சி எனக்குக் கிடைத்துள்ளது. கடந்த ஐ.பி.எல் தொடரின் போது, என் உடல் மீண்டும் 30 வயது இளைஞனைப் போலப் புத்துணர்ச்சியோடு இருந்தது. 2011-ல் நான் முதன்முதலில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடத் தொடங்கியபோது, சிறு வயதிலேயே பார்ட்டி கலாச்சாரத்திற்குப் பழகிவிட்டேன். அப்போது ஏபி டி வில்லியர்ஸ் 'வாழ்க்கையில் சமநிலை முக்கியம்' என்று அறிவுறுத்தினார்.

ஆனால் அதை பின்பற்றுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. குறிப்பாக, என் விவாகரத்திற்குப் பிறகு மனதளவில் மிகவும் உடைந்தேன். அதனால் மதுப்பழக்கமும் அதிகமானது. ஆனால், இதே நிலை தொடர்ந்தால் நான் உயிர் மூச்சாக நேசிக்கும் கிரிக்கெட் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதை உணர்ந்து, அதிலிருந்து முழுமையாக வெளியே வர முடிவு செய்தேன். நாம் ஒரு பொது மனிதராக இருக்கும்போது, நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அனைவரும் பேசுவார்கள். அது எனக்கு பெரும் மனவேதனையைத் தந்தது.

யுஸ்வேந்திர சாஹல்
யுஸ்வேந்திர சாஹல்

இதனால் எனக்கு மான பதற்றமும் (Anxiety), திடீர் பயமும் (Panic Attack) வரத் தொடங்கின. பயம் அதிகரிக்கும் போது என்னால் பேச முடியாது. உதடுகள் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். இதையடுத்தே பி.சி.சி.ஐ முன்னாள் பொருளாளர் அனிருத் சௌத்ரியிடம் பேசி கிரிக்கெட்டிலிருந்து சில காலம் ஓய்வு பெற்றேன். இந்தக் கடினமான காலத்தில் எனது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் உறுதுணையாக இருந்தனர். எனக்கு இப்போது 36 வயது. மதுப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டு, மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்." என்றார்.

சூர்யகுமார் சாதனைக்கு எண்ட் கார்டு! பவர் பிளேயில் தனி சாம்ராஜ்யம்… சாதனைகள் படைத்த அபிஷேக் சர்மா!

டி20 கிரிக்கெட்டில் சில வீரர்கள் களமிறங்கினாலே எதிரணியின் திட்டங்கள் மாறிவிடும். அந்த வகையில், பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என்று யோசிப்பதற்குள், அதை எல்லைக்கோட்டுக்கு அனுப்பிவிடுவார்... மேலும் பார்க்க

NZ vs IND: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!' - 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்

ஒரு காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தவர் புவனேஷ்வர் குமார். புதிய பந்தை கையில் எடுத்தாலே ஸ்விங்... டெத் ஓவர்களில் பந்தை கச்சிதமாகக் கட்டுப்படுத்தும் திறன் எனத் தனக்... மேலும் பார்க்க

'இது எளிதான முடிவு அல்ல, மன அமைதியுடன் நான் விடைபெறுகிறேன்.!'- ஹர்மன்ப்ரீத் கவுர் எமோஷனல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வட... மேலும் பார்க்க

"நான் வைபவிடம் பெரும்பாலும் கிரிக்கெட் குறித்து பேசமாட்டேன்; ஏன்னா.?"- ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து ... மேலும் பார்க்க

`கதை இன்னும் முடியல'- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 15,000 ODI ரன்கள் என்ற பிரமாண்ட மைல்கல்லை கடந்ததுடன், சதம் விளாசி ஆட்டத்தையும் இந்தியாவின் வசமாக்கியிருக்கிறார் கோலி. ஒரு பக்கம் அவரது வரலாற்றுச் சா... மேலும் பார்க்க

JPN vs IND: கடைசி பந்து வரை ஆட்டம் காட்டிய ஜப்பான்… 2 ரன்களில் `த்ரில்' வெற்றி பெற்ற இந்தியா!

“ஆட்டம் சின்னதா இருக்கலாம்... ஆனா ட்விஸ்ட் பெரியதாக இருக்கணும்!” என்பதற்கு சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி.வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி... மேலும் பார்க்க