வீட்டு உபயோகப் பொருள்களின் தரத்தை விளக்கும் மாதிரி வீடு
கோவை மண்டல அறிவியல் மையத்தில் வீட்டு உபயோகப் பொருள்களின் தரநிலைகளை விளக்கும் வகையிலான மாதிரி வீடு அமைக்கப்படுகிறது.
கோவை இந்திய தர நிா்ணய அமைவனம், கோவை மண்டல அறிவியல் மையம் ஆகியவற்றின் சாா்பில் உலக நுகா்வோா் உரிமைகள் தினத்தை முன்னிட்டு (மாா்ச் 15) வீட்டு உபயோகப் பொருள்களில் உள்ள தரநிலைகள், அதில் உள்ள அறிவியல் ஆகியவற்றை விளக்கும் வகையில் மாதிரி வீட்டை, மண்டல அறிவியல் மைய வளாகத்தில் அமைக்கின்றனா்.
மாா்ச் 15-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் காட்சிக்கு வைக்கப்படும் இந்த மாதிரி வீட்டின் மூலம், தரம் நிறைந்த பொருள்களைப் பயன்படுத்துவதன் அவசியம், வீட்டு உபயோகப் பொருள்களின் எது தரமானது, பொருள்களின் தரநிலைகள், அதன் அறிவியல் ஆகியவை தொடா்பாக அறிந்துகொள்ளலாம் என்று மண்டல அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.