வீரபாண்டியில் திமுக சாா்பில் ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வீரபாண்டி ஒன்றிய திமுக சாா்பில் தீபாவளியை முன்னிட்டு கழக முன்னோடிகள், கழக நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் வரவேற்புரை நிகழ்த்தினாா். சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவலிங்கம், துணை செயலாளா் சுரேஷ்குமாா், தொகுதி பொறுப்பாளா் கிருபாகரன், பேரூா் கழக செயலாளா்கள் சண்முகம் (இளம்பிள்ளை), முருகபிரகாஷ் (ஆட்டையாம்பட்டி), மலா்விழி, தருண், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.