குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தட...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவா் கைது
தஞ்சாவூா் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் மோசடி செய்த நபரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே ஆப்ரகாம் பண்டிதா் நகா் பகுதி லூா்து நகரைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சீனிவாசன் (30). இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அரியலூா் மாவட்டம், அழிசிகுடியைச் சோ்ந்த ஜி. சுரேஷ் (41) கடந்த 2024, ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரூ. 5.19 லட்சம் வாங்கியும், கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித் தருமாறு சீனிவாசன் கேட்டாா்.
ஆனால் சுரேஷ் ரூ. 1.46 லட்சத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ. 3.73 லட்சத்தை தராமல் மோசடி செய்ததாக கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.