BB Tamil 9 Day 52: பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள்; எஃப்ஜே - வியானா லவ் டிராக்...
வெள்ளித்திரையின் `மேஜிக்' ரஜினிகாந்த்! - நீண்ட திரைப்பயணத்தில் நீங்கள் கொண்டாடிய தருணங்கள்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படத் தேர்வு முறை அவரின் பக்குவமான திரைப்பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெறும் கமர்ஷியல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தனது வயதிற்கேற்பவும், தனது சமூகப் பொறுப்பிற்கு ஏற்பவும் கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கிறார். ரஜினியின் சமீபத்திய படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், ஏதேனும் ஒரு சமூகச் செய்தியை அழுத்தமாகப் பேசுகின்றன.
மேலும், தன்னை மட்டுமே மையமாகக் கொண்ட பிரம்மாண்டத்தை விடுத்து, இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டும் ரஜினி, கதையின் தேவைக்காக மற்ற இளம் நடிகர்களுக்கும் சமமான அல்லது வலுவான திரை இடத்தைக் (Equal Screen Space) கொடுக்க தயங்குவதும் இல்லை!
அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்!
ரஜினியின் திரைப்படங்கள்: உங்களுக்குப் பிடித்த ரஜினி படம் எது? அந்தப் படம் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? மறக்க முடியாத அந்தக் காட்சி, வசனம் அல்லது பாடல் எது?
ரசிகர் அனுபவங்கள்: ரஜினியைப் பார்க்க நீங்கள் காத்திருந்த தருணங்கள், அவரது பட வெளியீட்டின்போது நீங்கள் செய்த கொண்டாட்டங்கள், அவரது ரசிகர் மன்றத்தில் உங்கள் பங்களிப்பு – இப்படிப்பட்ட உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை எழுதுங்கள்.
நம்பிக்கை மற்றும் உத்வேகம்: ரஜினியின் வாழ்க்கைப்பயணம், அவரது கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை உங்களுக்கு எவ்வாறு உத்வேகமாக அமைந்தன?
சமூகப் பார்வை: ரஜினியின் பொது வாழ்க்கை அல்லது அவரது திரைப்படங்கள் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட சமூகப் பாடங்கள் ஏதேனும் உண்டா?

உங்கள் நினைவுகள், கட்டுரைகள் அல்லது சுவாரஸ்யமான அனுபவங்களை எங்களுக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகள் 'மை விகடன்' பக்கத்தில் வெளியாகும்.
உங்கள் கட்டுரையை, உங்கள் முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு Word File ஆக தயார் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
my@vikatan.com
தேர்ந்தெடுக்கப்படும் தரமான, வீரியமான படைப்புகள் விகடன்.காம் இணையதளத்தில் உங்கள் பெயருடன் வெளியிடப்படும்.
உங்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


















