செய்திகள் :

வேறொரு பெண்ணுடன் திருமணம்; விபரீத முடிவெடுத்த காதலி - கூமாபட்டி இளைஞரை சிக்க வைத்த சிசுவின் DNA

post image

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சேர்வாரன் என்பவரது மகள் ஈஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் கடந்த 2019ம் ஆண்டு காதலித்துள்ளனர். ஈஸ்வரி வீட்டார் இருவரின் காதலை ஏற்க மறுத்து ஈஸ்வரியை வேறொரு நபருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளனர்.

திருமணமாகிய ஒரே நாளில் அவருடன் வாழ மறுத்து ஈஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜ்குமாருடனான காதலை ஈஸ்வரி தொடர்ந்த நிலையில் ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் ராஜ்குமார் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் ஊருக்கே தெரியவர, ஈஸ்வரி தனது பெற்றோரின் சம்மதத்தை பெற்று குடும்பத்துடன் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கைது

ஆனால் ராஜ்குமார் ஈஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததுடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். சில நாட்களில் இது ஈஸ்வரிக்கு தெரியவர அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈஸ்வரியின் மரணம் குறித்து அவரது தந்தை சேர்வாரன் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையில் ஈஸ்வரி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆர்.டி.ஒ விசாரணை நடத்தப்பட்டதுடன், சிசுவின் டி.என்.ஏ மற்றும் ராஜ்குமாரின் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டதில் தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரியின் கற்பத்திற்கு ராஜ்குமார்தான் காரணம் என்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற டி.என்.ஏ மரபணு சோதனை முடிவில் உறுதியானது. இதையடுத்து சந்தேக மரண வழக்கை தற்கொலைக்கு தூண்டியது, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது ஆகிய பிரிவுகளாக மாற்றி இருவேறு பிரிவுகளின் கீழ் எஸ்.பி கௌதம் கோயல் உத்தரவின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆலோசனைப்படி, கூமாபட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் ராஜ்குமாரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் ஏமாற்றதால் 4 மாத சிசுவுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 6 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணை ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் கூமாபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர்; அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி

மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுக... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னைய... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் ... மேலும் பார்க்க

`தந்தை வேலை எனக்குத்தான்.!' - அரசு வேலை, சொத்துக்காக தாயை கூலிப்படை மூலம் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா தனது 45 வயது தாய் நீரஜ் சர்மாவை கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றத்திற்காக போலீஸார் கைது ச... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மனைவியைக் கொன்று காதலிக்கு போட்டோ அனுப்பிய இந்திய பொறியாளர் - 9 மாத நாடகம் முடிந்தது!

அமெரிக்க கனவு, காதல், திருமணம், துரோகம்... என ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் அத்தனை அம்சங்களும் அடங்கிய ஒரு கொடூர சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது திருமணம் மீறிய உறவு... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் சம்பந்தப்பட்ட பூட்டான் கார் கடத்தல் வழக்கு: மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

சர்வதேச கார் கடத்தல் நெட்வொர்க்கை முறியடிப்பதற்காக சுங்கத்துறை 'ஆபரேஷன் நும்கோர்' (Operation Numkhor) என்ற புலனாய்வு நடவடிக்கையைக் கடந்த சில மாதங்களாகத் தீவிரப்படுத்தி உள்ளது. சர்வதேச கும்பல், வரி செல... மேலும் பார்க்க